செஸ் ஒலிம்பியாட்: செஸ் விளையாட்டில் கிராண்ட்மாஸ்டர் ஆவது எப்படி..?

By karthikeyan VFirst Published Jul 29, 2022, 2:28 PM IST
Highlights

செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இன்று முதல் நடக்கவுள்ள நிலையில், செஸ் விளையாட்டில் கிராண்ட்மாஸ்டர் என்றால் என்ன, கிராண்ட்மாஸ்டர் ஆவது எப்படி என்று பார்ப்போம்.
 

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தமிழ்நாட்டில் மாமல்லபுரத்தில் நடக்கிறது. இன்று முதல் போட்டிகள் நடக்கின்றன. நேற்று சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழா பிரம்மாண்டமாக நடந்தது. பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை தொடங்கிவைத்தார்.

இன்று முதல் மாமல்லபுரத்தில் போட்டிகள் நடக்கின்றன. இந்த செஸ் ஒலிம்பியாட் தொடரில் 186 நாடுகளை சேர்ந்த 2500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ஆடுகின்றனர்.

இதையும் படிங்க - செஸ் ஒலிம்பியாட் ஜோதியை ஏற்றிய இளம் கிராண்ட்மாஸ்டர்கள் பிரக்ஞானந்தா, குகேஷ்..!

செஸ் ஒலிம்பியாட் பரபரப்பாகியுள்ள இந்த வேளையில், செஸ் விளையாட்டில் கிராண்ட்மாஸ்டர் பட்டம் என்றால் என்ன, கிராண்ட்மாஸ்டர் ஆவது எப்படி என்று பார்ப்போம்.

கிரிக்கெட், கால்பந்து அணிகளுக்கும், வீரர்களுக்கும் உலக கோப்பை எப்படி பெருங்கனவோ, செஸ் வீரர்களுக்கு அப்படித்தான் கிராண்ட்மாஸ்டர் பட்டமும். செஸ் விளையாடும் ஒவ்வொரு வீரரும் கிராண்ட்மாஸ்டர் ஆகவேண்டும் என்ற கனவுடன் தான் பயணிப்பார்கள்.

கிராண்ட்மாஸ்டர் ஆவது எப்படி?

சர்வதேச செஸ் கூட்டமைப்பின் கீழ் 2500 புள்ளிகளை கடந்து கிராண்ட்மாஸ்டர்களாக திகழும் 3 செஸ் வீரர்களை தொடர்ச்சியாக வீழ்த்தி வெற்றி பெற்றால் கிராண்ட்மாஸ்டர் பட்டம் பெறலாம். அந்த 3 கிராண்ட்மாஸ்டர்களும் வெவ்வேறு நாடுகளை சேர்ந்தவர்களாக இருக்கவேண்டும்.

இதையும் படிங்க - செஸ் ஒலிம்பியாட்: குறுகிய காலத்தில் மிகச்சிறப்பான ஏற்பாடுகள்.. தமிழக அரசுக்கு பிரதமர் மோடி பாராட்டு

மேலும் 3 சர்வதேச தொடர்களில் சான்றிதழ் வாங்கினால் கிராண்ட்மாஸ்டர் பட்டம் பெறலாம். 
 

click me!