சிஎஸ்கேவின் வெற்றி கொண்டாட்டத்தில் இணையும் தல - தளபதி!! | CM Stalin

By Narendran SFirst Published Nov 16, 2021, 5:10 PM IST
Highlights

#CM Stalin | நவம்பர் 20 ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்களுக்கான பாராட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் பங்கேற்று வீரர்களுக்கு வாழ்த்து தெரிவிக்க உள்ளார். 

சென்னையில் நவம்பர் 20 ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்களுக்கு நடைபெறும் பாராட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவுள்ளார். இந்திய கிரிக்கெட் வாரியம் ஆண்டுதோறும் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரை நடத்தி வருகிறது. 2021 சீசன் இந்தியாவில் தொடங்கியது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அதன்பின் டி20 உலக கோப்பைக்கு முன்னதாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட்டது. இதில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணியின் டூபிளஸ்சிஸ் அபாரமான ஆட்டத்தால் 3 விக்கெட்டுகளை இழந்து 192 ரன்கள் எடுத்தது. அதன்பின் 193 என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடிய கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கில் மற்றும் வெங்கடேச அய்யர் அரைசதம் அடித்த போதிலும் அதன் பின்னர் வந்த ஒரு பேட்ஸ்மேன் கூட இரட்டை இலக்க ரன்கள் கூட எடுக்கவில்லை. கடைசியாக பந்துவீச்சாளர்கள் ஆன பெர்குசன் மற்றும் மாவி ஆகிய இருவரும் ஓரளவுக்கு அடுத்து ஆடினாலும் இலக்கை எட்ட முடியவில்லை என்பதால் அந்த அணி தோல்வி அடைந்தது. இதனை அடுத்து நான்காவது முறையாக ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2010, 201,1 2018 ஆகிய மூன்று ஆண்டுகளில் தல தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டம் பெற்ற நிலையில் தற்போது 2021 ஆம் ஆண்டிலும் சாம்பியன் பட்டம் பெற்று உள்ளது. இதை அடுத்து சிஎஸ்கே அணியின் வெற்றி கொண்டாட்டம் சென்னையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் இடையில் உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்றது என்பதும், இந்திய அணியின் வழிகாட்டியாக தோனி நியமனம் செய்யப்பட்டார் என்பதால் வெற்றி கொண்டாட்ட தேதி ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் வருகின்ற நவம்பர் 20 ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்களுக்கு பாராட்டு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பாராட்டிய தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்த வெற்றியை கொண்டாட சென்னை அன்புடன் காத்திருக்கிறது  மகேந்திர சிங் தோனி என டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதற்கிடையே சென்னை வீரர்களுக்கு பாராட்டு விழா நடத்த அணியின் நிர்வாகம் முடிவெடுத்த நிலையில் உலக கோப்பை தொடரில் பங்கேற்பதற்காக சென்னை அணியின் கேப்டன் தோனி, சர்துல் தாகூர், ஜடேஜா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் ஐக்கிய அரபு அமீரகத்திலேயே இருந்ததால் பாராட்டு விழாவிற்கான தேதி முடிவு செய்யப்படாமல் இருந்தது. இந்த நிலையில் தற்போது உலக கோப்பை தொடர் முடிவடைந்ததை அடுத்து வருகின்ற நவம்பர் 20 ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்களுக்கு பாராட்டு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் பங்கேற்று வீரர்களுக்கு வாழ்த்து தெரிவிக்க உள்ளார்.  

click me!