முதல் முறையாக வெஸ்ட் இண்டீஸ் சென்ற ருதுராஜ், சுப்மன் கில், யஷஸ்வி: டெஸ்ட் போட்டி எப்படி இருக்கும்?

By Rsiva kumar  |  First Published Jul 4, 2023, 5:20 PM IST

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்னதாக இந்தியா பயிற்சி போட்டியில் விளையாட உள்ளது.


வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 2 டெஸ்ட், 3 ஒரு நாள் கிரிக்கெட் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. வரும் 12 ஆம் தேதி இந்த தொடர் தொடங்கி ஆகஸ்ட் 13 ஆம் தேதி வரையில் கிட்டத்தட்ட ஒரு மாதம் வரையில் நடக்கிறது. இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இதில், சட்டேஷ்வர் புஜாரா, உமேஷ் யாதவ் மற்றும் முகமது ஷமி ஆகியோர் இடம் பெறவில்லை.

13ஆவது ஆண்டு திருமண நாளை கொண்டாடும் தோனி அண்ட் சாக்‌ஷி தோனி!

Tap to resize

Latest Videos

மாறாக, யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், முகேஷ் குமார், ஜெயதேவ் உனத்கட், நவ்தீப் சைனி ஆகியோர் இடம் பெற்றனர். டெஸ்ட் தொடருக்கான இந்திய அணிக்கு ரோகித் சர்மா தான் கேப்டன். ஆனால், அஜின்க்யா ரஹானே துணை கேப்டனாக நியமிக்கப்பட்டார். வரும் 12 ஆம் தேதி இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி தொடங்க உள்ள நிலையில், அதற்கு முன்னதாக இந்திய வீரர்களுக்கு பயிற்சி போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

4ஆவது இடம் யாருக்கு? முதல் தகுதிச் சுற்றில் லைகா கோவை கிங்ஸ் – திண்டுக்கல் டிராகன்ஸ் பலப்பரீட்சை!

இந்தப் பயிற்சி போட்டி வரும் 6ஆம் தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்தப் பயிற்சிப் போட்டி 2 நாட்கள் நடக்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னதாக இந்திய அணி எந்த டெஸ்ட் போட்டியிலும், ஒரு நாள் போட்டியிலும் விளையாடவில்லை. இந்திய அணியின் தோல்விக்கு இதுவும் ஒரு காரணமாக சொல்லப்பட்டது. ஆனால், தொடர்ந்து கிட்டத்தட்ட ஒன்றரை மாதமாக ஐபிஎல் போட்டிகளில் இந்திய அணியினர் இடம் பெற்று விளையாடினர்.

விராட் கோலியின் கிரிக்கெட் வாழ்க்கையில் 2023 உலகக் கோப்பை தான் கடைசி உலகக் கோப்பையா?

இதன் காரணமாக டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, 2 நாள் பயிற்சி போட்டி விளையாட இருக்கிறது. முதல் முறையாக வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப் பயணம் சென்றுள்ள சுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், முகேஷ் குமார் மற்றும் யஷஸ்வி ஜெய்ஷ்வால் ஆகியோருக்கு இந்தப் பயிற்சி போட்டி சிறப்பானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

துப்பாக்கி ஏந்திய செக்யூரிட்டி கார்டை பைக்கில் ஏற்றி வந்த தோனி: வைரலாகும் வீடியோ!

click me!