
மகளிர் பிரீமியர் லீக் தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. முதல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி அபாரமாக ஆடி வெற்றிகளை குவித்து புள்ளி பட்டியலில் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்திவருகிறது. ஆடிய 5 போட்டிகளிலும் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.
ஆடிய 5 போட்டிகளில் 4 வெற்றிகளுடன் டெல்லி கேபிடள்ஸ் அணி 2ம் இடத்திலும், 5 போட்டிகளில் 2 வெற்றிகளை பெற்ற யுபி வாரியர்ஸ் அணி 3ம் இடத்திலும், 6 போட்டிகளில் 2 வெற்றிகளை பெற்ற குஜராத் ஜெயிண்ட்ஸ் அணி 4ம் இடத்திலும் உள்ளன. ஆர்சிபி அணி கடைசி இடத்தில் உள்ளது.
இன்று மும்பை டி.ஒய்.பாட்டீல் ஸ்டேடியத்தில் நடக்கும் போட்டியில் மும்பை இந்தியன்ஸும், யுபி வாரியர்ஸும் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற யுபி வாரியர்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
மும்பை இந்தியன்ஸ் அணி:
ஹைலி மேத்யூஸ், யஸ்டிகா பாட்டியா, நாட் ஸ்கிவர் பிரண்ட், ஹர்மன்ப்ரீத் கௌர் (கேப்டன்), அமெலியா கெர், இசி வாங், ஹுமைரா காஸி, தாரா குஜார், அமன்ஜோத் கௌர், ஜிந்தாமனி கலிடா, சாய்கா இஷாக்.
யுபி வாரியர்ஸ் அணி:
அலைஸா ஹீலி (கேப்டன்), தேவிகா வைத்யா, கிரன் நவ்கிரே, டாலியா மெக்ராத், கிரேஸ் ஹாரிஸ், தீப்தி ஷர்மா, பார்ஷவி சோப்ரா, சிம்ரன் ஷேக், சோஃபி எக்லிஸ்டோன், அஞ்சலி சர்வானி, ராஜேஷ்வர் கெய்க்வாட்.