IND vs AUS 2nd ODI: புதிய சிக்கலில் ரோகித் சர்மா - 2ஆவது ODIயில் இடம் பெறும் வீரர்கள் யார் யார் தெரியுமா?

By Rsiva kumar  |  First Published Mar 18, 2023, 3:19 PM IST

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2ஆவது ஒரு நாள் போட்டி நாளை விசாகப்பட்டினம் மைதானத்தில் நடக்கிறது.
 


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபியை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி சாம்பியனானது. இதைத் தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையிலான 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஒரு நாள் போட்டி நேற்று மும்பையில் நடந்தது. இந்தப் போட்டியில் ரோகித் சர்மா தனது மனைவி ரித்திகாவின் சகோதரர் குணால் சஜ்தேயின் திருமணம் காரணமாக விளையாடவில்லை. அவருக்குப் பதிலாக ஹர்திக் பாண்டியா ஒரு நாள் கேப்டனாக அறிமுகமானார்.

காலில் அறுவை சிகிச்சை செய்தும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மிரட்டி ரவீந்திர ஜடேஜா படைத்த சாதனைகள்!

Tap to resize

Latest Videos

நேற்று நடந்த முதல் ஒரு நாள் போட்டியில் முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 188 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதைத் தொடர்ந்து ஆடிய இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இதன் மூலம் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது ஒரு நாள் போட்டி நாளை விசாகப்பட்டினம் மைதானத்தில் நடக்கிறது. இதில், ரோகித் சர்மா விளையாடுகிறார்.

ரூ.1200 முதல் ரூ.10000 வரை விற்பனை- 3ஆவது போட்டிக்கு டிக்கெட் வாங்க நீண்ட வரிசையில் காத்திருந்த ரசிகர்கள்!

முதல் போட்டியில் ரோகித் சர்மாவுக்கு பதிலாக இடம் பெற்று விளையாடிய இஷான் கிஷான் வெறும் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். தற்போது ரோகித் சர்மா அணிக்கு திரும்பிய நிலையில், இஷான் கிஷான் உட்கார வைக்கப்படுவார். மற்றபடி அணியில் எந்த மாற்றமும் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

159 ஆஸ்திரேலியாவுல, 188 இந்தியாவுல - இரண்டிலும் 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி!

ஆனால், ரோகித் சர்மாவுக்கு ஒரு புதிய சிக்கல் ஒன்று உருவாகியுள்ளது. புதிய கேப்டனாக அவதாரம் எடுத்து தனது முதல் கேப்டன்ஷிப்பிலேயே ஹர்திக் பாண்டியா வெற்றியை பதிவு செய்துவிட்ட நிலையில், 2ஆவது போட்டியில் அணிக்கு திரும்பியும் ரோகித் சர்மா கண்டிப்பாக வெற்றி பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அப்படி அவர் தோல்வியை தழுவினால், கேப்டன் வாய்ப்பு ஹர்திக் பாண்டியாவிற்கு செல்லும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே டி20 போட்டியில் கேப்டனாக இருந்து கலக்கி வரும் ஹர்திக் பாண்டியா ஐபிஎல் தொடரிலும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு சாம்பியன் பட்டம் தேடித் தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு சூரியன், ஒரு சந்திரன், ஒரே தலைவர் - ரஜினியுடன் போட்டோ எடுத்த குல்தீப் யாதவ் தமிழில் பதிவு!

இந்தியா: பிளேயிங் 11

ஓபனிங் - ரோகித் சர்மா - சுப்மன் கில்
3. விராட் கோலி
4. சூர்யகுமார் யாதவ்
5. கேஎல் ராகுல்
6. ஹர்திக் பாண்டியா
7. ரவீந்திர ஜடேஜா
8. ஷர்துல் தாக்கூர்
9. குல்தீப் யாதவ்
10. முகமது சிராஜ்
11. முகமது ஷமி

ஆஸ்திரேலியா- பிளேயிங் 11

ஓபனிங் - டிராவிஸ் ஹெட் அல்லது டேவிட் வார்னர் - மிட்செல் மார்ஷ்
3. ஸ்டீவ் ஸ்மித்
4. மார்னஸ் லபுஷேன்
5. ஜோஷ் இங்க்லிஸ்
6. கேமரூன் க்ரீன்
7. கிளென் மேக்ஸ்வெல்
8. மார்கஸ் ஸ்டோய்னிஸ்
9. சீன் அப்பாட்
10. மிட்செல் ஸ்டார்க்
11. ஆடம் ஜம்பா

click me!