மகளிர் டி20 உலக கோப்பை: பெத் மூனி அதிரடி அரைசதம்.. அரையிறுதியில் இந்திய அணிக்கு கடின இலக்கை நிர்ணயித்தது ஆஸி.,

Published : Feb 23, 2023, 08:15 PM IST
மகளிர் டி20 உலக கோப்பை: பெத் மூனி அதிரடி அரைசதம்.. அரையிறுதியில் இந்திய அணிக்கு கடின இலக்கை நிர்ணயித்தது ஆஸி.,

சுருக்கம்

மகளிர் டி20 உலக கோப்பை அரையிறுதியில் இந்திய அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி, 20 ஓவரில் 172 ரன்களை குவித்து 173 ரன்கள் என்ற கடின இலக்கை இந்திய அணிக்கு நிர்ணயித்துள்ளது.  

மகளிர் டி20 உலக கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்குகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய 4 அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறின.  

இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா இடையேயான 2வது அரையிறுதி போட்டி நாளை(பிப்ரவரி 24) நடக்கிறது. இந்தியா - ஆஸ்திரேலியா இடையே இன்று நடந்துவரும் முதல் அரையிறுதி போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

ஒரு கேப்டன் இப்படி தொந்தியும் தொப்பையுமா இருக்கலாமா..? அசிங்கமா இல்ல..? ரோஹித்தை விளாசிய கபில் தேவ்

இந்திய மகளிர் அணி:

ஷஃபாலி வெர்மா, ஸ்மிரிதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மன்ப்ரீத் கௌர் (கேப்டன்), ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), யஸ்டிகா பாட்டியா, ஸ்னே ராணா, ஷிகா பாண்டே, ராதா யாதவ், ரேணுகா சிங்.

ஆஸ்திரேலிய மகளிர் அணி:

அலைஸா ஹீலி (விக்கெட் கீப்பர்), பெத் மூனி, மெக் லானிங் (கேப்டன்), ஆஷ்லே கார்ட்னெர், எலைஸ் பெர்ரி, டாலியா மெக்ராத், கிரேஸ் ஹாரிஸ், ஜார்ஜியா வேர்ஹாம், ஜெஸ் ஜோனாசென், மேகான் ஸ்கட், டார்ஸி பிரௌன்.

முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீராங்கனைகள் பெத் மூனி மற்றும் அலைஸா ஹீலி இணைந்து சிறப்பாக ஆடி முதல் விக்கெட்டுகு 7.3 ஓவரில் 52 ரன்களை சேர்த்தனர். அலைஸா ஹீலி 25 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். சிறப்பாக பேட்டிங் ஆடிய பெத் மூனி அரைசதம் அடித்தார். பெத் மூனி 37 பந்தில் 54 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.

TNPL 2023 Auction: சஞ்சய் யாதவை ஓவர்டேக் செய்து உச்சபட்ச தொகைக்கு விலைபோன சாய் சுதர்சன்.. மாபெரும் சாதனை

அதன்பின்னர் கேப்டன் லானிங் பொறுப்புடன் பேட்டிங் ஆடி 34 பந்தில் 49 ரன்கள் அடித்து கடைசிவரை களத்தில் நின்று இன்னிங்ஸை முடித்து கொடுத்தார். ஆஷ்லே கார்ட்னெர் 18 பந்தில் 5 பவுண்டரிகளுடன் 31 ரன்கள் அடிக்க, 20 ஓவரில் 172 ரன்களை குவித்த ஆஸ்திரேலிய அணி 173 ரன்கள் என்ற கடின இலக்கை இந்திய அணிக்கு நிர்ணயித்துள்ளது.

நாக் அவுட் போட்டியான அரையிறுதி போட்டியில் 173 ரன்கள் என்பது கண்டிப்பாகவே விரட்டுவதற்கு சற்றே கடினமான இலக்குதான்.
 

PREV
click me!

Recommended Stories

IND vs NZ 3-வது ஓடிஐ.. வேஸ்ட் லக்கேஜ்.. ஆல்ரவுண்டரை நீக்கிய பிசிசிஐ.. இந்திய அணி பிளேயிங் லெவன்!
IND VS NZ டி20 தொடரில் இருந்து தமிழக வீரர் விலகல்.. மாற்று வீரர் இவரா?