NZ vs ENG: 2வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியின் ஆடும் லெவன் அறிவிப்பு

Published : Feb 23, 2023, 05:39 PM IST
NZ vs ENG: 2வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியின் ஆடும் லெவன் அறிவிப்பு

சுருக்கம்

நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியின் ஆடும் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது.  

இங்கிலாந்து அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 267 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடங்கிய முதல் சீசனில் டைட்டிலை வென்று சாதனை படைத்த நியூசிலாந்து அணி, இந்த முறை டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் கடைசிக்கு முந்தைய இடமான 8வது இடத்தில் உள்ளது. இங்கிலாந்து அணியும் 5ம் இடத்தில் உள்ளது. எனவே இந்த 2 அணிகளுமே டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முன்னேற முடியாது.

TNPL 2023 Auction: சஞ்சய் யாதவை ஓவர்டேக் செய்து உச்சபட்ச தொகைக்கு விலைபோன சாய் சுதர்சன்.. மாபெரும் சாதனை

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களில் உள்ள இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தான் ஃபைனலுக்கு முன்னேறும். எனவே இங்கிலாந்து - நியூசிலாந்து டெஸ்ட் தொடர் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகிக்கும் நிலையில், 2வது டெஸ்ட் போட்டி நாளை வெலிங்டனில் தொடங்குகிறது. சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழக்காமல் இருக்க, 2வது டெஸ்ட்டில் நியூசிலாந்து வெற்றி பெற்றாக வேண்டும்.

இந்நிலையில், 2வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியின் ஆடும் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் டெஸ்ட்டில் அபார வெற்றி பெற்றதால், 2வது டெஸ்ட்டுக்கான அணி காம்பினேஷனில் எந்த மாற்றமும் செய்யாமல் முதல் டெஸ்ட்டில் ஆடிய அதே ஆடும் லெவனையே 2வது டெஸ்ட்டுக்கும் அறிவித்துள்ளது இங்கிலாந்து அணி.

IPL 2023: டெல்லி கேபிடள்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு கேப்டன்கள் நியமனம்! 2 பேருமே வெளிநாட்டு கேப்டன்கள்

2வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி:

ஜாக் க்ராவ்லி, பென் டக்கெட், ஆலி போப், ஜோ ரூட், ஹாரி ப்ரூக்,  பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), பென் ஃபோக்ஸ் (விக்கெட் கீப்பர்), ஆலி ராபின்சன், ஜாக் லீச், ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன்.

PREV
click me!

Recommended Stories

யார்க்கர் மன்னன் ஜஸ்பிரித் பும்ரா வரலாற்று சாதனை..! மற்ற பவுலர்கள் நினைச்சு கூட பார்க்க முடியாது!
IND VS SA 1st T20: தென்னாப்பிரிக்காவை வெறும் 74 ரன்னில் சுருட்டி வீசிய இந்தியா.. மெகா வெற்றி!