மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 2ஆவது சீசனுக்கான ஏலம் நாளை மும்பையில் நடக்கிறது. மொத்தமாக 165 பேர் ஏலத்திற்கு இடம் பெற்றுள்ளனர்.
ஐபிஎல் தொடர் போன்று பெண்களுக்கும், மகளிர் பிரீமியர் லீக் (Womens Premier League (WPL)) டபிள்யூ.பி.எல் தொடர் நடத்தப்படுகிறது. நடந்து முடிந்த முதல் சீசனில் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியனானது. இந்த சீசனில் டெல்லி கேபிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, யுபி வாரியர்ஸ் என்று மொத்தமாக 5 அணிகள் இடம் பெற்றது.
இதைத் தொடர்ந்து 2ஆவது சீசன் வரும் 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தொடருக்கான ஏலம் நாளை 9 ஆம் தேதி மும்பையில் நடக்கிறது. இந்த ஏலத்தில் மொத்தமாக 165 வீரர்கள் தங்களது பெயரை பதிவு செய்துள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த ஏலத்தில் 104 இந்திய வீரர்களும், 15 அசோசியேட் நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் உள்பட 61 வெளிநாட்டு வீரர்களும் இடம் பெற்றுள்ளனர்.
ஒவ்வொரு அணியிலும் 30 இடங்கள் உள்ளன. இதில், 9 வெளிநாட்டு வீரர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஏலத்திற்கு வெஸ்ட் இண்டீஸ் வீராங்கனை டியான்ட்ரா டாட்டின் மற்றும் ஆஸ்திரேலியாவின் கிம் கார்த் ஆகிய இருவர் மட்டுமே ரூ. 50 லட்சத்திற்கு தங்களது அடிப்படை விலையாக நிர்ணயித்துள்ளனர். இது தவிர, அனாபெல் சதர்லேண்ட் (ஆஸ்திரேலியா), எமி ஜோன்ஸ் (இங்கிலாந்து), ஷப்னிம் இஸ்மாயில் (தென் ஆப்பிரிக்கா) மற்றும் ஜார்ஜியா வேர்ஹோம் (ஆஸ்திரேலியா) ஆகியோர் ரூ.40 லட்சமாக அடிப்படை விலையை நிர்ணயித்துள்ளனர். மேலும், ரூ.30 லட்சம் அடிப்படை விலையில் 30 வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர்.
இந்த ஏலத்திற்கு முன்னதாக, 5 அணிகளிலும் 21 வெளிநாட்டு வீராங்கனைகள் உள்பட மொத்தமாக 60 வீராங்கனைகள் தக்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும், 29 வீராங்கனைகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ஒளிபரப்பும் உரிமை:
WPL 2024 ஏலம் ஸ்போர்ட்ஸ்10 நெட்வொர்க் சேனல்களில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. அதே நேரத்தில் ஜியோ சினிமாவிலும் லைவ் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.
நிபந்தைகள்/விதிமுறைகள்:
ஒவ்வொரு அணியிலும் குறைந்த 15 வீரர்கள் மற்றும் அதிகபட்சமாக 18 வீரர்கள் வரையில் வாங்கிக் கொள்ளலாம்.
ஒவ்வொரு அணியிலும் பர்ஸ் தொகையாக ரூ.12 கோடி என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அசோசியேட் நேஷனிலிருந்து ஒருவர் உட்பட 7 வெளிநாட்டு வீரர்களை ஒவ்வொரு அணியும் வாங்கிக் கொள்ளலாம்.
அசோசியேட் நேஷனிலிருந்து ஒரு வீரர் உள்பட மொத்தம் 5 வெளிநாட்டு வீரர்களை பிளேயிங் 11ல் இருக்க வேண்டும் என்ற நிபந்தை ஒவ்வொரு அணிக்கும் உண்டு.
இப்போ ஃபீல் பண்ணுறேன்; இந்திய ரசிகர்களை நான் அப்படி சொல்லியிருக்க கூடாது – ஹாரி ப்ரூக்!
பர்ஸ் தொகை:
குஜராத் ஜெயிண்ட்ஸ் - ரூ.5.95 கோடி
யுபி வாரியர்ஸ் - ரூ.4 கோடி
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - ரூ.3.35 கோடி
டெல்லி கேபிடல்ஸ் - ரூ.2.25 கோடி
மும்பை இந்தியன்ஸ் – ரூ.2.1 கோடி
தக்க வைக்கப்பட்ட, விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியல்:
டெல்லி கேபிடல்ஸ்:
ஆலிஸ் கேப்ஸி*, அருந்ததி ரெட்டி, ஜெமிமாம் ரோட்ரிக்ஸ், ஜெஸ் ஜோனாசென்*, லாரா ஹாரிஸ், மரிசான்னே கப்*, மெக் லானிங்*, மின்னு மணி, பூனம் யாதவ், ராதா யாதவ், ஷஃபாலி வர்மா, ஷிகா பாண்டே, சினேகா தீப்தி, தனியாஸ் பாட்டியா, டைட்டஸ் சாது.
விடுவிக்கப்பட்ட வீரர்கள்:
அபர்ணா மொண்டல், ஜாசியா அக்தர், தாரா நோரிஸ்*.
குஜராத் ஜெயிண்ட்ஸ்:
ஆஷ்லே கார்ட்னர்*, பெத் மூனி*, தயாளன் ஹேமலதா, ஹர்லீன் தியோல், லாரா வால்வார்ட்*, ஷப்னம் ஷகில், சினே ராணா, தனுஜா கன்வர்.
விடுவிக்கப்பட்ட வீரர்கள்:
அனாபெல் சதர்லேண்ட்*, அஷ்வனி குமாரி, ஜார்ஜியா வேர்ஹாம்*, ஹர்லி காலா, கிம் கார்த்*, மான்சி ஜோஷி, மோனிகா பட்டேல், பருணிகா சிசோடியா, சபினேனி மேகனா, சோபியா டன்க்லே*, சுஷ்மா வர்மா.
மும்பை இந்தியன்ஸ்:
தக்க வைக்கப்பட்ட வீரர்கள்:
அமன்ஜோத் கவுர், அமெலியா கெர்*, சோலி ட்ரையோன்*, ஹர்மன்ப்ரீத் கவுர், ஹெய்லி மேத்யூஸ்*, ஹுமைரா காசி, இசபெல் வோங்*, ஜின்டிமணி கலிதா, நடாலி ஸ்கீவர்*, பூஜா வஸ்த்ரகர், பிரியங்கா பாலா, சைகா இஷாக், யாஸ்திகா பாட்டியா
விடுவிக்கப்பட்ட வீரர்கள்:
தாரா குஜ்ஜர், ஹீதர் கிரஹாம்*, நீலம் பிஷ்ட், சோனம் யாதவ்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:
ஆஷா ஷோபனா, திஷா கசத், எல்லிஸ் பெர்ரி*, ஹீதர் நைட்*, இந்திராணி ராய், கனிகா அகுஜா, ரேணுகா சிங், ரிச்சா கோஷ், ஸ்ரேயங்கா பாட்டீல், ஸ்மிருதி மந்தனா, சோஃபி டெவின்*
விடுவிக்கப்பட்ட வீரர்கள்:
டேனே வான் நீகெர்க்*, எரின் பர்ன்ஸ்*, கோமல் சன்சாத், மேகன் ஷட்*, பூனம் கெம்னார், ப்ரீத்தி போஸ், சஹானா பவார்
யுபி வாரியர்ஸ்:
அலிசா ஹீலி*, அஞ்சலி சர்வானி, தீப்தி சர்மா, கிரேஸ் ஹாரிஸ்*, கிரண் நவ்கிரே, லாரன் பெல்*, லக்ஷ்மி யாதவ், பார்ஷவி சோப்ரா, ராஜேஸ்வரி கயக்வாட், எஸ். யஷஸ்ரீ, ஸ்வேதா செஹ்ராவத், சோஃபி எக்லெஸ்டோன்*, தஹ்லியா மெக்ராத்*
விடுவிக்கப்பட்ட வீரர்கள்:
தேவிகா வைத்யா, ஷப்னிம் இஸ்மாயில்*, ஷிவாலி ஷிண்டே, சிம்ரன் ஷேக்
இங்கு * குறிப்பது வெளிநாட்டு வீரர்கள்.