WI vs BAN: 2வது டெஸ்ட்டிலும் வெற்றி.. வங்கதேசத்தை ஒயிட்வாஷ் செய்து தொடரை வென்றது வெஸ்ட் இண்டீஸ்

By karthikeyan VFirst Published Jun 28, 2022, 2:19 PM IST
Highlights

வங்கதேசத்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி 2-0 என தொடரை வென்றது.
 

வங்கதேச அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் தொடரில் ஆடிவருகிறது. டெஸ்ட், ஒருநாள், டி20 தொடரில் ஆடுகிறது. முதலில் டெஸ்ட் தொடர் நடந்தது. முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகித்த நிலையில், 2வது டெஸ்ட் போட்டி செயிண்ட் லூசியாவில் நடந்தது.

இதையும் படிங்க - ENG vs NZ: கடைசி டெஸ்ட்டிலும் வெற்றி.. நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்து டெஸ்ட் தொடரை வென்றது இங்கிலாந்து

2வது டெஸ்ட்டில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்ய, முதலில் பேட்டிங் ஆடிய வங்கதேச அணி, முதல் இன்னிங்ஸில் 234 ரன்கள் அடித்தது.

இதையும் படிங்க - IRE vs IND டி20: இத்தனை வருஷமா தோனி, கோலி, ரோஹித் செய்யாத சாதனையை செய்த ஹர்திக் பாண்டியா

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி, கைல் மேயர்ஸின் அபார சதம் (146) மற்றும் மற்ற வீரர்களின் பங்களிப்பால் முதல் இன்னிங்ஸில் 408 ரன்களை குவித்தது.

இதையும் படிங்க - T20 WC இந்திய அணியிலிருந்து தூக்கி எறியப்படும் ரோஹித், கோலி, ராகுல்..? அணியின் நலன் கருதி அதிரடி முடிவு

174 ரன்கள் பின் தங்கிய நிலையில், 2வது இன்னிங்ஸை ஆடிய வங்கதேச அணி வெறும் 186 ரன்களுக்கு சுருண்டது. வங்கதேச அணி மொத்தமாக வெறும் 12 ரன்கள் மட்டுமே முன்னிலை வகித்த நிலையில், 13 ரன்கள் என்ற ஒன்றுமே இல்லாத இலக்கை விரட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 2-0 என வங்கதேசத்தை ஒயிட்வாஷ் செய்து டெஸ்ட் தொடரை வென்றது.
 

click me!