ENG vs NZ: கடைசி டெஸ்ட்டிலும் வெற்றி.. நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்து டெஸ்ட் தொடரை வென்றது இங்கிலாந்து

By karthikeyan VFirst Published Jun 27, 2022, 9:55 PM IST
Highlights

நியூசிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியிலும் 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்து டெஸ்ட் தொடரை வென்றது.
 

நியூசிலாந்து அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று இங்கிலாந்து அணி தொடரை ஏற்கனவே 2-0 என தொடரை வென்றுவிட்ட நிலையில், கடந்த 23ம் தேதி தொடங்கி கடைசி டெஸ்ட் போட்டி நடந்தது.

கடைசி டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற்று நியூசிலாந்தை ஒயிட்வாஷ்ன் செய்து தொடரை வென்றது இங்கிலாந்து அணி. ஹெடிங்லியில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் டேரைல் மிட்செலின் சதத்தால் (109) 329 ரன்கள் அடித்தது.

இதையும் படிங்க - பையன் செம டேலண்ட்.. ஐபிஎல்லில் கண்டிப்பா ஆடுவான்! அயர்லாந்து இளம் வீரருக்கு பேட் கொடுத்து புகழ்ந்த பாண்டியா

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி வெறும் 55 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில், அதன்பின்னர் ஜானி பேர்ஸ்டோ அதிரடியாக பேட்டிங் ஆடி சதமடித்தார். அவருடன் இணைந்து சிறப்பாக பேட்டிங் ஆடிய ஓவர்டன் 97 ரன்களை குவித்து 3 ரன்னில் சதத்தை தவறவிட்டார். ஸ்டூவர்ட் பிராட் அதிரடியாக பேட்டிங் ஆடி 36 பந்தில் 42 ரன்கள் அடிக்க, பேர்ஸ்டோ 162 ரன்களை குவிக்க, பேர்ஸ்டோவின் அபாரமான சதத்தால் முதல் இன்னிங்ஸில் 360 ரன்களை குவித்தது இங்கிலாந்து அணி.

இதையும் படிங்க - IRE vs IND: ருதுராஜ் டீம்ல இருந்தும் ஓபனிங்கில் இறங்காதது ஏன்..? இதுதான் காரணம்

31 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2வது இன்னிங்ஸை ஆடிய நியூசிலாந்து அணியின் டாம் லேதம்(76), டேரைல் மிட்செல் (56) மற்றும் டாம் பிளண்டெல் (88) ஆகிய மூவரது சிறப்பான அரைசதங்களால் 2வது இன்னிங்ஸில் 326 ரன்கள் அடித்தது.

4வது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணியின் ஆலி போப்(82), ஜோ ரூட்(86) மற்றும் ஜானி பேர்ஸ்டோ(71) ஆகியோரின் அதிரடியான பேட்டிங்கால் இலக்கை எளிதாக அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இங்கிலாந்து அணி.

இதையும் படிங்க - உலக கோப்பை வின்னிங் கேப்டனுக்கு நேர்ந்த பரிதாபம்.. இயன் மோர்கன் ஓய்வு..! இங்கி.,அடுத்த கேப்டன் இவரா..?

3 டெஸ்ட் போட்டிகளிலும் நியூசிலாந்தை வீழ்த்தி 3-0 என ஒயிட்வாஷ் செய்து டெஸ்ட் தொடரை வென்றது இங்கிலாந்து.
 

click me!