TNPL 2022: முரளி விஜய் அதிரடி பேட்டிங்.. திருப்பூர் தமிழன்ஸுக்கு சவாலான இலக்கை நிர்ணயித்த திருச்சி வாரியர்ஸ்

Published : Jun 27, 2022, 09:14 PM IST
TNPL 2022: முரளி விஜய் அதிரடி பேட்டிங்.. திருப்பூர் தமிழன்ஸுக்கு சவாலான இலக்கை நிர்ணயித்த திருச்சி வாரியர்ஸ்

சுருக்கம்

திருப்பூர் தமிழன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய திருச்சி வாரியர்ஸ் அணி 20 ஓவரில் 157 ரன்கள் அடித்து, 158 ரன்கள் என்ற சவாலான இலக்கை நிர்ணயித்துள்ளது.  

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 6வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இன்றைய போட்டியில் ரூபி திருச்சி வாரியர்ஸ் மற்றும் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் ஆடிவருகின்றன. நெல்லையில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி:

ஸ்ரீகாந்த் அனிருதா (கேப்டன்), எஸ் சித்தார்த், சுப்ரமணியன் ஆனந்த், மான் பஃப்னா, சுரேஷ் குமார், துஷார் ரஹேஜா (விக்கெட் கீப்பர்), ஆர் ராஜ்குமார், எம் முகமது, அஸ்வின் கிறிஸ்ட், எஸ் மோகன் பிரசாத், லக்‌ஷ்மி சத்தியநாராயணன்.

இதையும் படிங்க - IRE vs IND டி20: இத்தனை வருஷமா தோனி, கோலி, ரோஹித் செய்யாத சாதனையை செய்த ஹர்திக் பாண்டியா

ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி:

அமித் சாத்விக், முரளி விஜய், நிதிஷ் ராஜகோபால், ஆதித்யா கணேஷ் (விக்கெட் கீப்பர்), முகமது அட்னான் கான், ஆண்டனி தாஸ், பி சரவண குமார், ராஹில் ஷா (கேப்டன்), பொய்யாமொழி, அஜய் கிருஷ்ணா, எம் மதிவாணன்.

முதலில் பேட்டிங் ஆடிய ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியின் சீனியர் தொடக்க வீரரான முரளி விஜய் அதிரடியாக பேட்டிங் ஆடி சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்தார். அதிரடியாக ஆடிய முரளி விஜய் 16 பந்தில் 6 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 34 ரன்கள் அடித்தார். மற்றொரு தொடக்க வீரரான அமித் சாத்விக் 21 பந்தில் 26 ரன்கள் அடித்தார். 

இதையும் படிங்க - IRE vs IND: ருதுராஜ் டீம்ல இருந்தும் ஓபனிங்கில் இறங்காதது ஏன்..? இதுதான் காரணம்

முரளி விஜயின் அதிரடியால் 5.2 ஓவரில் 57 ரன்களை குவித்திருந்தது திருச்சி அணி. அந்த ஓவரின் 3வது பந்தில் முரளி விஜய் ஆட்டமிழந்தார். முரளி விஜய் ஆட்டமிழந்த பிறகும் ஓரளவிற்கு ரன் வேகம் இருந்தது. 13 ஓவரிலேயே 10 ரன்களை திருச்சி அணி எட்டியிருந்தாலும் 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

இதையும் படிங்க - ENG vs IND: ரோஹித்துக்கு கொரோனா.. டெஸ்ட் அணியில் மயன்க் அகர்வால்..! கேப்டன் யார்..?

அதன்பின்னர் டெத் ஓவர்களில் பெரியளவில் ரன் வரவில்லை. மதிவாணன் அதிரடியாக ஆடி 18 பந்தில் 27 ரன்களை அடித்து பங்களிப்பு செய்ய, 20 ஓவரில் 157 ரன்கள் அடித்த திருச்சி வாரியர்ஸ் அணி, 158 ரன்கள் என்ற சவாலான இலக்கை திருப்பூர் தமிழன்ஸ் அணிக்கு நிர்ணயித்துள்ளது.
 

PREV
click me!

Recommended Stories

யார்க்கர் மன்னன் ஜஸ்பிரித் பும்ரா வரலாற்று சாதனை..! மற்ற பவுலர்கள் நினைச்சு கூட பார்க்க முடியாது!
IND VS SA 1st T20: தென்னாப்பிரிக்காவை வெறும் 74 ரன்னில் சுருட்டி வீசிய இந்தியா.. மெகா வெற்றி!