பையன் செம டேலண்ட்.. ஐபிஎல்லில் கண்டிப்பா ஆடுவான்! அயர்லாந்து இளம் வீரருக்கு பேட் கொடுத்து புகழ்ந்த பாண்டியா

By karthikeyan V  |  First Published Jun 27, 2022, 6:36 PM IST

இந்தியாவிற்கு எதிராக அபாரமாக பேட்டிங் ஆடிய அயர்லாந்து அணியின் இளம் அதிரடி வீரர் ஹாரி டெக்டாருக்கு தனது பேட்டை கொடுத்து வெகுவாக புகழ்ந்துள்ளார் ஹர்திக் பாண்டியா.
 


இந்தியா - அயர்லாந்து இடையேயான 2 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி ஜூன் 26ம் தேதி டப்லினில் நடந்தது.

இந்த தொடரில் இந்திய அணி ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சியில் ஆடிவருகிறது. முதல் போட்டியில் மழை குறுக்கிட்டதால் 12 ஓவர்களாக குறைத்து போட்டி நடத்தப்பட்டது. 

Tap to resize

Latest Videos

முதலில் பேட்டிங் ஆடிய அயர்லாந்து அணி 12 ஓவரில் 108 ரன்களை குவித்தது. அதற்கு முக்கிய காரணமாக இருந்தது, அந்த அணியின் இளம் அதிரடி வீரர் ஹாரி டெக்டார் தான். அதிரடியாக ஆடி இந்திய பவுலிங்கை பொளந்துகட்டிய டெக்டார் 33 பந்தில் 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 64 ரன்களை குவித்தார். அவரது அதிரடியான பேட்டிங்கால் தான் அயர்லாந்து அணி 12 ஓவரில் 108 ரன்கள் அடித்தது.

இதையும் படிங்க - IRE vs IND டி20: இத்தனை வருஷமா தோனி, கோலி, ரோஹித் செய்யாத சாதனையை செய்த ஹர்திக் பாண்டியா

தீபக் ஹூடா, இஷான் கிஷன் மற்றும் ஹர்திக் பாண்டியாவின் அதிரடியான பேட்டிங்கால் 10வது ஓவரிலேயே அந்த இலக்கை அடித்து இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் அபாரமாக பேட்டிங் ஆடிய அயர்லாந்து அணியின் ஹாரி டெக்டார், ஹர்திக் பாண்டியாவை வெகுவாக கவர்ந்துவிட்டார். அவருக்கு தனது பேட்டை கொடுத்து பாராட்டியதுடன், வெகுவாக புகழாரமும் சூட்டியுள்ளார் ஹர்திக் பாண்டியா.

இதையும் படிங்க - உலக கோப்பை வின்னிங் கேப்டனுக்கு நேர்ந்த பரிதாபம்.. இயன் மோர்கன் ஓய்வு..! இங்கி.,அடுத்த கேப்டன் இவரா..?

ஹாரி டெக்டார் குறித்து பேசிய ஹர்திக் பாண்டியா, ஹாரி டெக்டார் சில அருமையான ஷாட்டுகளை ஆடினார். 22 வயதில் அபாரமாக பேட்டிங் ஆடினார். அவருக்கு எனது பேட்டை பரிசாக கொடுத்தேன். இன்னும் பல சிக்ஸர்களை அடித்து, ஐபிஎல் அணியால் விரைவில் எடுக்கப்படுவார்.

இதையும் படிங்க - IRE vs IND: ருதுராஜ் டீம்ல இருந்தும் ஓபனிங்கில் இறங்காதது ஏன்..? இதுதான் காரணம்

டெக்டாருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். அவருக்கு சரியாக வழிகாட்டினால் பெரிய வீரராக ஜொலிப்பார். ஐபிஎல்லில் மட்டுமல்ல; உலகம் முழுதும் நடக்கும் பல்வேறு லீக் தொடர்களிலும் ஆடுவார் என்று ஹர்திக் பாண்டியா தெரிவித்தார்.
 

click me!