உலக கோப்பை வின்னிங் கேப்டனுக்கு நேர்ந்த பரிதாபம்.. இயன் மோர்கன் ஓய்வு..! இங்கி.,அடுத்த கேப்டன் இவரா..?

By karthikeyan VFirst Published Jun 27, 2022, 4:23 PM IST
Highlights

இங்கிலாந்து ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டனான இயன் மோர்கன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறப்போகிறார்.
 

அயர்லாந்தை சேர்ந்த இயன் மோர்கன் அயர்லாந்து அணியில் அறிமுகமாகி பின்னர் இங்கிலாந்துக்காக ஆடிவருகிறார். இங்கிலாந்து அணி ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையை வென்றதில்லை என்ற ஒரு வருத்தம் அந்த அணிக்கு பல ஆண்டுகளாக இருந்துவந்தது.

அந்த குறையை தீர்த்துவைத்தவர் இயன் மோர்கன். 2015 உலக கோப்பையில் படுதோல்வி அடைந்து தொடரை விட்டு வெளியேறிய இங்கிலாந்து அணியை, அதன்பின்னர் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் அச்சமற்ற கிரிக்கெட் ஆடி அசாத்திய ஸ்கோர்களை அடிக்கவல்ல மற்றும் எதிரணிகளை அடித்து துவம்சம்செய்து வெற்றிகளை வசப்படுத்தக்கூடிய வலுவான அணியாக கட்டமைத்தார் இயன் மோர்கன்.

இதையும் படிங்க - IRE vs IND: ருதுராஜ் டீம்ல இருந்தும் ஓபனிங்கில் இறங்காதது ஏன்..? இதுதான் காரணம்

2015 உலக கோப்பை தோல்விக்கு பின்னரே, 2019 உலக கோப்பையை மனதில் கொண்டு, இடைப்பட்ட 4 ஆண்டுகளில் வலுவான அணியை  கட்டமைத்தார் இயன் மோர்கன். பட்லர், பேர்ஸ்டோ, ராய் ஆகிய வீரர்களுடன் தானும் அதிரடியாக பேட்டிங் ஆடி, 400 என்ற ஸ்கோரை ஒருநாள் கிரிக்கெட்டில் அசால்ட்டாக்கியவர் இயன் மோர்கன். 

பெரும் எதிர்பார்ப்புடன் 2019 உலக கோப்பையில் களமிறங்கிய இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி ஃபைனலில் நியூசிலாந்தை வீழ்த்தி இங்கிலாந்து அணியின் பல்லாண்டு கால உலக கோப்பை கனவை நனவாக்கினார் மோர்கன்.

இதையும் படிங்க - ENG vs IND: ரோஹித்துக்கு கொரோனா.. டெஸ்ட் அணியில் மயன்க் அகர்வால்..! கேப்டன் யார்..?

சர்வதேச கிரிக்கெட்டில் 248 ஒருநாள் போட்டிகளில் ஆடி 7701 ரன்களையும்,  115 டி20 போட்டிகளில் ஆடி 2458 ரன்களையும் குவித்துள்ளார்.

கடந்த ஒன்றரை ஆண்டாக ஃபிட்னெஸ் மற்றும் ஃபார்மில் இல்லாமல் தவித்துவரும் மோர்கன், அண்மையில் நடந்த நெதர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்து இங்கிலாந்து சாதனையை செய்தபோதிலும், அந்த போட்டியிலும், அதற்கடுத்த போட்டியிலும் என 2 அடுத்தடுத்த போட்டிகளில் டக் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார் மோர்கன்.

இதையும் படிங்க - T20 WC இந்திய அணியிலிருந்து தூக்கி எறியப்படும் ரோஹித், கோலி, ராகுல்..? அணியின் நலன் கருதி அதிரடி முடிவு

தான் ஒரு கேப்டனாக இருந்தாலும், அணிக்கு தன்னால் பங்களிப்பு செய்ய முடியவில்லை என்ற நிலையில், தான் அணியில் இருந்து பயனில்லை என்று மோர்கன் கூறியிருந்தார். அதுவும் உண்மைதான். அந்தவகையில், இனிமேல் தான் இங்கிலாந்துக்கு அணிக்கு தேவையில்லை என்று முடிவெடுத்துள்ள மோர்கன், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற முடிவு செய்துள்ளார். நாளை(ஜூன்28) செவ்வாய்க்கிழமை ஓய்வை அறிவிக்க முடிவு செய்துள்ளார். நாளை ஓய்வு முடிவை அறிவிப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
 

click me!