TNPL 2022: துஷார் - முகமது அதிரடி ஃபினிஷிங்.. திருச்சி வாரியர்ஸை வீழ்த்தி திருப்பூர் தமிழன்ஸ் அபார வெற்றி

By karthikeyan VFirst Published Jun 27, 2022, 10:58 PM IST
Highlights

ரூபி திருச்சி வாரியர்ஸை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி வெற்றி பெற்றது.
 

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் ரூபி திருச்சி வாரியர்ஸ் மற்றும் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற திருப்பூர் தமிழன்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி:

ஸ்ரீகாந்த் அனிருதா (கேப்டன்), எஸ் சித்தார்த், சுப்ரமணியன் ஆனந்த், மான் பஃப்னா, சுரேஷ் குமார், துஷார் ரஹேஜா (விக்கெட் கீப்பர்), ஆர் ராஜ்குமார், எம் முகமது, அஸ்வின் கிறிஸ்ட், எஸ் மோகன் பிரசாத், லக்‌ஷ்மி சத்தியநாராயணன்.

ரூபி திருச்சி வாரியர்ஸ் அணி:

அமித் சாத்விக், முரளி விஜய், நிதிஷ் ராஜகோபால், ஆதித்யா கணேஷ் (விக்கெட் கீப்பர்), முகமது அட்னான் கான், ஆண்டனி தாஸ், பி சரவண குமார், ராஹில் ஷா (கேப்டன்), பொய்யாமொழி, அஜய் கிருஷ்ணா, எம் மதிவாணன்.

இதையும் படிங்க - உலக கோப்பை வின்னிங் கேப்டனுக்கு நேர்ந்த பரிதாபம்.. இயன் மோர்கன் ஓய்வு..! இங்கி.,அடுத்த கேப்டன் இவரா..?

முதலில் பேட்டிங் ஆடிய ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியின் சீனியர் தொடக்க வீரரான முரளி விஜய் அதிரடியாக பேட்டிங் ஆடி சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்தார். அதிரடியாக ஆடிய முரளி விஜய் 16 பந்தில் 6 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 34 ரன்கள் அடித்தார். மற்றொரு தொடக்க வீரரான அமித் சாத்விக் 21 பந்தில் 26 ரன்கள் அடித்தார். 

இதையும் படிங்க - IRE vs IND டி20: இத்தனை வருஷமா தோனி, கோலி, ரோஹித் செய்யாத சாதனையை செய்த ஹர்திக் பாண்டியா

முரளி விஜயின் அதிரடியால் 5.3 ஓவரில் 57 ரன்களை குவித்த திருச்சி அணி, முரளி விஜயின் விக்கெட்டுக்கு பின் ஸ்கோர் எடுக்க திணறியது. 13வது ஓவரில் 100 ரன்களை எட்டியது திருச்சி அணி. டெத் ஓவர்களில் பெரியளவில் ரன் வரவில்லை. மதிவாணன் அதிரடியாக ஆடி 18 பந்தில் 27 ரன்களை அடித்து பங்களிப்பு செய்ய, 20 ஓவரில் 157 ரன்கள் அடித்தது திருச்சி வாரியர்ஸ் அணி.

இதையும் படிங்க - ENG vs NZ: கடைசி டெஸ்ட்டிலும் வெற்றி.. நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்து டெஸ்ட் தொடரை வென்றது இங்கிலாந்து

158 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய திருப்பூர் அணியில் சுப்ரமணியன் ஆனந்த் சிறப்பாக பேட்டிங் ஆடி 26 பந்தில் 35 ரன்கள் அடித்தார். டாப் மற்றும் மிடில் ஆர்டரில் மற்ற வீரர்கள் சோபிக்காத நிலையில், பின்வரிசையில் துஷார் ரஹேஜா மற்றும் எம் முகமதுவின் அதிரடியான பேட்டிங்கால் 19வது ஓவரில் இலக்கை அடித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது திருப்பூர் தமிழன்ஸ் அணி. துஷார் ரஹாஜே 26 பந்தில் 42 ரன்களும், முகமது 15 பந்தில் 29 ரன்களும் அடித்தனர்.
 

click me!