ஐபிஎல் சீசன் முழுவதும் ரிஷப் பண்ட் அணிக்கு தேவை - ரிக்கி பாண்டிங்!

By Rsiva kumar  |  First Published Jan 21, 2023, 3:22 PM IST

ரிஷப் பண்டால் பயணம் செய்ய முடிந்து அணியை சுற்றிலும் இருக்க முடிந்தால் வாரத்தின் ஒவ்வொரு நாளும் அவர் என் அருகிலேயே அமர்ந்திருக்க வேண்டும் என்று டெல்லி கேபிடல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.
 


கார் விபத்தில் பலத்த காயமடைந்த நிலையில், டேராடூனில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இந்திய கிரிக்கெட் வீரர், அதன் பிறகு மேல்சிகிச்சைக்காக மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு, எலும்பியல் மருத்துவரான டின்ஷாவின் மேற்பார்வையின் கீழ் ரிஷப் பண்டிற்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு முழங்காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

வரிசையாக நடையை கட்டும் வீரர்கள்: மோசமான சாதனையில் முதலிடம் பிடித்த நியூசிலாந்து 15/5!

Tap to resize

Latest Videos

இன்னும் 2 வாரங்களில் ரிஷப் பண்ட் வீடு திரும்புவார் என்று மருத்துவமனை வட்டாரத்திலிருந்து தகவல் வெளியானது. தசைநார்களில் பெரிய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், காயம் அடைந்த தசைநார்கள் இயற்கையாகவே குணமடைகிறதா? இல்லையா என்பதை மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்.

ரோகித்துக்கு இவ்வளவு நக்கல் கூடாது: டாஸ் ஜெயிச்சு, ரொம்பவே யோசிச்ச ரோகித் சர்மா: இந்தியா பௌலிங் தேர்வு!

தசைநார்கள் அதிகளவில் காயம் அடைந்திருந்தன. கவலைக்கு இதுவே அதிக காரணமாகவும் இருந்தது. தற்போது தசைநார்களில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், இனிமேல் அறுவை சிகிச்சை தேவைப்படாது என்று மருத்துவர்கள் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதோடு, இன்னும் 2 வாரங்களில் அவர் வீடு திரும்புவார். பொதுவாக தசைநார்கள் 4 முதல் 6 மாதங்களில் குணமாகும். இன்னும் 2 மாதங்களில் அவர் தன்னை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் தயார்படுத்திக் கொள்ள முயற்சிக்கலாம். அதுமட்டுமின்றி அவ்வப்போது மருத்துவரின் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டிரெஸ்ஸிங் ரூமில் வீடியோ எடுத்த சகால்: உனக்கு நல்ல எதிர்காலம் இருக்கு - ரோகித் சர்மா கிண்டல்!

இந்த நிலையில், டெல்லி கேபிடல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் கூறுகையில், அணியின் அதிகாரப்பூர்வ கேப்டனுக்கு இன்னும் ஒரு பங்கு இருக்கிறது. ரிஷப் பண்ட் முழுவதும் குணமடைந்திருந்தால், ஐபிஎல் சீசன் முழுவதும் அணியை சுற்றிலும் இருக்க வேண்டும். அவரால் உண்மையில் பயணம் செய்ய முடிந்தால் அவர் அணியைச் சுற்றிலும் இருக்க வேண்டும். வாரத்தின் ஒவ்வொரு நாளும் அவர் என் அருகில் அமர்ந்திருக்க வேண்டும். உண்மையில், அவர் முழுமையான உடல் தகுதி பெறவில்லை என்றாலும் நாங்கள் அவரைச் சுற்றிலும் இருக்க விரும்புகிறோம் என்று தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரிஜ் பூஷன் சரண் சிங் 4 வாரங்களுக்கு பதவி விலகல்: மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டம் வாபஸ்!

click me!