வரிசையாக நடையை கட்டும் வீரர்கள்: மோசமான சாதனையில் முதலிடம் பிடித்த நியூசிலாந்து 15/5!

By Rsiva kumarFirst Published Jan 21, 2023, 2:43 PM IST
Highlights

இந்தியாவுக்கு எதிரான 2ஆவது ஒரு நாள் போட்டியில் நியூசிலாந்து அணி வீரர்கள் வரிசையாக அவுட்டாகி வெளியேறி 15 ரன்களில் 5 விக்கெட் இழந்து மோசமான சாதனை படைத்துள்ளனர்.

நியூசிலாந்து அணி இந்தியாவிற்கு வந்து 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலும், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும் விளையாடி வருகிறது. 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டி20 போட்டி கடந்த 18 ஆம் தேதி ஹைதராபாத் மைதானத்தில் நடந்தது. இதில், இந்திய அணி முதலில் ஆடி 349 ரன்கள் குவித்தது. 350 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு நியூசிலாந்து அணி ஆடியது. ஆனால், அந்த அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 337 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் காரணமாக இந்தியா 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

ரோகித்துக்கு இவ்வளவு நக்கல் கூடாது: டாஸ் ஜெயிச்சு, ரொம்பவே யோசிச்ச ரோகித் சர்மா: இந்தியா பௌலிங் தேர்வு!

இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது ஒரு நாள் போட்டி இன்று ராய்ப்பூரில் உள்ள ஷகீத் வீர் நாராயண் சிங் சர்வதேச மைதானத்தில் நடக்கிறது. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்யவா, பீல்டிங் தேர்வு செய்யவா என்று கொஞ்ச நேரம் நெற்றியில் கையை வைத்துக் கொண்டு யோசித்துள்ளார். அதன் பிறகு சிரித்துக் கொண்டே பந்து வீச்சு தேர்வு செய்தார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: டாஸ் ஜெயித்தால் என்ன கேட்க வேண்டும் என்று நான் முழுவதுமாக மறந்துவிட்டேன் என்று தெரிவித்துள்ளார். 

டிரெஸ்ஸிங் ரூமில் வீடியோ எடுத்த சகால்: உனக்கு நல்ல எதிர்காலம் இருக்கு - ரோகித் சர்மா கிண்டல்!

இதையடுத்து முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணியில் ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. முகமது ஷமி ஓவரில் பின் ஆலென் கிளீன் போல்டானார். அவர் ரன் ஏதும் எடுக்கவில்லை. அடுத்து வந்த ஹென்றி நிக்கோலஸ் 20 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே எடுத்து சிராஜ் பந்தில் ஸ்லிப்பில் நின்றிருந்த சுப்மன் கில்லிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பின்னர், டேரில் மிட்செல் (1), டெவோன் கான்வே (7), டாம் லாதம் (1) என்று வரிசையாக வெளியேறினர். நியூசிலாந்து அணி 10.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 15 ரன்கள் மட்டுமே எடுத்து மோசமான சாதனை படைத்துள்ளது. இதில் ஒரேயொரு பவுண்டரி மட்டுமே அடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னதாக கடந்த 2022 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 26 ரன்கள் எடுத்திருந்தது.

கடந்த 2005 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு எதிரான ஒரு நாள் போட்டியில் ஜிம்பாப்வே நீ 5 விக்கெட் இழப்பிற்கு 30 ரன்கள் எடுத்திருந்தது.

இதே போன்று கடந்த 1997 ஆம் ஆண்டு கொழும்பு மைதானத்தில் நடந்த போட்டியில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 29 ரன்கள் எடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரிஜ் பூஷன் சரண் சிங் 4 வாரங்களுக்கு பதவி விலகல்: மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டம் வாபஸ்!

இதே போன்று நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழந்து எடுத்த ரன்கள்

2023- இந்தியாவிற்கு எதிராக ராய்ப்பூரில் நடந்த போட்டியில் 15/5
2001- இலங்கைக்கு எதிராக கொழும்பு மைதானத்தில் நடந்த போட்டியில் 18/5
2010- வங்கதேசத்திற்கு எதிராக மிர்பூரில் நடந்த போட்டியில் 20/5
2003- ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஃபரிதாபாத்தில் நடந்த போட்டியில் 21/5

தற்போது முதல் போட்டியில் அதிரடியாக ஆடிய பிரேஸ்வெல் களமிறங்கியிருக்கிறார். அவருடன் கிளென் பிலிப்ஸ் ஆடி வருகிறார். பந்து வீச்சு தரப்பில் முகமது ஷமி 2 விக்கெட்டுகளும், சிராஜ், ஹர்திக் பாண்டியா மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளும் கைப்பற்றியுள்ளனர். ராய்ப்பூர் மைதானத்தில் முதல் முறையாக நடக்கும் போட்டி என்பதால், மைதானம் குறித்து தெரிந்திராத நிலையில், தற்போது மைதானம் பந்து வீச்சிற்கு ஏற்றது என்று தெரியவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆட்டைய போட்ட மோசடி கும்பல்: ஐசிசியிடமிருந்து ஆன்லைன் மூலமாக ரூ.20 கோடி அபேஸ்!

A funny moment from Rohit during toss time!!!pic.twitter.com/iWXCLLBmlB

— Johns. (@CricCrazyJohns)

 

click me!