லக்னோவில் நடக்கும் முதல் ஐபிஎல் போட்டி என்பதால் மைதானம் குறித்து எந்த ஐடியாவும் இல்லாத நிலையில் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம் என்று லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுல் கூறியுள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் 16ஆவது சீசன் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முதல் போட்டியில் குஜதாத் டைட்டன்ஸ் அணியும், 2ஆவது போட்டியில் மழை குறுக்கீடு காரணமாக டக் ஒர்த் லீவிஸ் முறைப்படி பஞ்சாப் கிங்ச் அணியும் வெற்றி பெற்றன. இதையடுத்து நேற்று இரவு டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக நடந்த 3 ஆவது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியது.
IPL 2023 KKR: பிராவோவின் விக்கெட் சாதனையை முறியடித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எக்ஸ்பிரஸ் உமேஷ் யாதவ்!
லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடக்கும் முதல் போட்டி என்பதால் மைதானம் எப்படி இருக்கும் என்று எந்த கணியுமே கணித்திருக்க வாய்ப்பில்லை. எனினும், டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் குவித்தது. இதில், கைல் மேயர்ஸ் அதிரடியாக ஆடி 38 பந்துகளில் 7 சிக்ஸர்கள் 2 பவுண்டரிகள் உள்பட 73 ரன்கள் சேர்த்தார்.
IPL 2023: சென்னை சூப்பர் கிங்ஸ் எல்லாம் பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லாது - கிறிஸ் கெயில்!
பின்னர், கடின இலக்கை துரத்திய டெல்லி அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி தான். பிருத்வி ஷா 12, மிட்செல் மார்ஷ் டக் அவுட்டில் ஆட்டமிழந்தனர். சர்ஃப்ராஸ் கானும் 4 ரன்களில் வெளியேறினார். கடைசியாக அப்படி இப்படின்னு வார்னர் 50 ரன்கள் 56 ரன்கள் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற டெல்லி 143 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 50 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் வெற்றி வாகை சூடியது.
ஐஐடி மெட்ராஸின் ஐபிஎல் ’கிரிக்கெட் அண்ட் கோடிங்’ தரவு அறிவியல் போட்டி அறிவிப்பு!
வெற்றிக்குப் பிறகு பேசிய கேப்டன் கேஎல் ராகுல் கூறியிருப்பதாவது: பிட்ச் குறித்து எந்த ஐடியாவும் இல்லை. இந்த வெற்றியின் மூலமாக எங்களுக்கு நம்பிக்கை வந்துள்ளது. டாஸ் ஜெயிப்பது நம் கையில் இல்லை என்றாலும் கூட, புதிய விதிகள் நமக்கேற்ற வீரர்களை எடுக்க உதவுகிறது. பேட்டிங் பவுலிங் இரண்டிலும் ஆழமாக செயல்பட வழிவகுக்கிறது. இந்தப் போட்டியில் 30 ரன்கள் அதிகமாகவே அடித்திருக்கிறோம் என்று உணர்ந்தேன். கைல் மேயர்ஸ் அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தார். இது மார்க் வுட்டுக்குரிய நாள். அவர்தான் சிறப்பாக பந்து வீசினார்.
டி20 போட்டியை எடுத்துக் கொண்டால் எப்போதும் த்ரில்லிங்காகத்தான் இருக்கும். எப்போது என்ன நடக்கும் என்றே தெரியாது. இந்த வெற்றியை ஊன்றுகோளாக வைத்துக் கொண்டு அடுத்த போட்டிக்கு தயாராக செயல்படுவோம் என்று கூறியுள்ளார். வரும் 3 ஆம் தேதி சென்னையில் நடக்கும் போட்டியில் லக்னோ அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. அகமதாபாத் மைதானத்தில் குஜராத் அணியிடம் தோல்வியடைந்த நிலையில், தனது சொந்த மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் எப்படி விளையாடும் என்பதை பொறுத்திருத்து பார்க்கலாம்.