IPL 2023: சிக்ஸர் மழை பொழிந்த கைல் மேயர்ஸ்! டெல்லி அணிக்கு கடின இலக்கை நிர்ணயித்த லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்

Published : Apr 01, 2023, 09:29 PM IST
IPL 2023: சிக்ஸர் மழை பொழிந்த கைல் மேயர்ஸ்! டெல்லி அணிக்கு கடின இலக்கை நிர்ணயித்த லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்

சுருக்கம்

ஐபிஎல் 16வது சீசனில் டெல்லி கேபிடள்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி, கைல் மேயர்ஸின் அதிரடி அரைசதத்தால் 20 ஓவரில் 193 ரன்களை குவித்து, 194 ரன்கள் என்ற கடின இலக்கை டெல்லி கேபிடள்ஸுக்கு நிர்ணயித்துள்ளது.   

ஐபிஎல் 16வது சீசன் நேற்று தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. முதல் போட்டியில் சிஎஸ்கேவை வீழ்த்தி நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணி அபார வெற்றி பெற்று, இந்த சீசனை வெற்றியுடன் தொடங்கியது. இன்று பிற்பகல் நடந்த போட்டியில் கேகேஆரை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. 

இரவு 7.30 மணிக்கு தொடங்கி நடந்துவரும் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸும் டெல்லி கேபிடள்ஸும் ஆடிவருகின்றன. லக்னோவில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடள்ஸ் கேப்டன் டேவிட் வார்னர் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

டெல்லி கேபிடள்ஸ் அணி:

டேவிட் வார்னர் (கேப்டன்), பிரித்வி ஷா, மிட்செல் மார்ஷ், ரைலீ ரூசோ, சர்ஃபராஸ் கான் (விக்கெட் கீப்பர்), ரோவ்மன் பவல், அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், சேத்தன் சக்காரியா, கலீல் அகமது, முகேஷ் குமார்.

IPL 2023: இந்த சீசனில் நான் ரொம்ப எதிர்பார்க்குற பிளேயர் அவர்தான்! வேற லெவல் சம்பவம் வெயிட்டிங் - ஹர்பஜன் சிங்

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி:

கேஎல் ராகுல் (கேப்டன்), கைல் மேயர்ஸ், மார்கஸ் ஸ்டோய்னிஸ், தீபக் ஹூடா, க்ருணல் பாண்டியா, நிகோலஸ் பூரன் (விக்கெட் கீப்பர்), ஆயுஷ் பதோனி, மார்க் உட், ஜெய்தேவ் உனாத்கத், ரவி பிஷ்னோய், ஆவேஷ் கான்.

முதலில் பேட்டிங் ஆடிய லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக கேஎல் ராகுலும் கைல் மேயர்ஸும் இறங்கினர். கேஎல் ராகுல் 12 பந்தில் 8 ரன் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார். 3ம் வரிசையில் இறங்கிய தீபக் ஹூடாவும் 18 பந்தில் பவுண்டரியே அடிக்காமல் வெறும் 17 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார்.

ஆனால் தொடக்கம் முதலே அடித்து ஆடி சிக்ஸர்களாக விளாசி சிக்ஸர் மழை பொழிந்த கைல் மேயர்ஸ் அரைசதம் அடித்தார். 38 பந்தில் 7 சிக்ஸர்களை விளாசிய கைல் மேயர்ஸ் 72 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். அவரது அதிரடியான பேட்டிங்கால் தான் லக்னோ அணியின் ஸ்கோர் உயர்ந்தது. 

IPL 2023:தோனி இந்த மாதிரி தப்புலாம் செய்யலாமா? தோனியின் மோசமான கேப்டன்சி தான் தோல்விக்கு காரணம்! சேவாக் அதிரடி

அதன்பின்னர் நிகோலஸ் பூரன் அதிரடியாக பேட்டிங் ஆடி 21 பந்தில் 2 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 36 ரன்கள் அடித்தார். ஆயுஷ் பதோனி 7 பந்தில் 18 ரன்கள் அடித்தார். கடைசி பந்தில் கிருஷ்ணப்பா கௌதம் சிக்ஸர் அடிக்க, 20 ஓவரில் 193 ரன்களை குவித்த லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி, 194 ரன்கள் என்ற கடினமான இலக்கை டெல்லி கேபிடள்ஸுக்கு நிர்ணயித்துள்ளது.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Vaibhav Sooryavanshi: 15 வயதில் IPL-ஐ மிரட்டும் இளம் புயல்! 29 பந்தில் 97 ரன்கள் அடித்து அசத்தல்!
Vaibhav Sooryavanshi: SRHஐ துவம்சம் செய்த RR! 'வைபவ்' ஆட்டத்தால் குவாலிபையர் 2-க்குள் கெத்தாக நுழைவு