IND vs AUS: அவுட்டா இல்லையா..? சர்ச்சையை கிளப்பிய விராட் கோலியின் விக்கெட்..! கோலி அதிருப்தி

By karthikeyan V  |  First Published Feb 18, 2023, 9:06 PM IST

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2வது டெஸ்ட்டில் விராட் கோலியின் விக்கெட் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 


இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயாயன 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நிலையில், 2வது டெஸ்ட் போட்டி டெல்லியில் நடந்துவருகிறது.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணி 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கும் நிலையில், 2வது டெஸ்ட்டில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

Tap to resize

Latest Videos

முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணியில் தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா மற்றும் மற்றும் மிடில் ஆர்டர் வீரர் பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் ஆகிய இருவர் மட்டுமே நன்றாக ஆடினர். உஸ்மான் கவாஜா 81 ரன்களும், ஹேண்ட்ஸ்கோம்ப் 72 ரன்களும் அடித்தனர். கம்மின்ஸ் 33 ரன்கள் அடித்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 263 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஷமி அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளும், அஷ்வின் மற்றும் ஜடேஜா ஆகிய இருவரும் தலா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

IND vs AUS: உன் பேட்டிங்கில் இதுதான்டா தம்பி பெரிய பிரச்னையே..! அதை சரி செய்.. ராகுலுக்கு கவாஸ்கர் அட்வைஸ்

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் நேதன் லயனிடம் சரணடைந்தது. ரோஹித் சர்மா(32), கேஎல் ராகுல்(17), புஜாரா(0), ஷ்ரேயாஸ் ஐயர்(4) மற்றும் கேஎஸ் பரத் (6) ஆகிய 5 வீரர்களையும் நேதன் லயன் வீழ்த்தினார். கோலி ஓரளவிற்கு தாக்குப்பிடித்து 44 ரன்கள் அடித்தார். 139 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது இந்திய அணி. அதன்பின்னர் அக்ஸர் படேல் மற்றும் அஷ்வின் ஆகிய இருவரும் இணைந்து அபாரமாக பேட்டிங் ஆடி 8வது விக்கெட்டுக்கு 114 ரன்களை குவித்தனர். அஷ்வின் 37 ரன்கள் அடித்தார். மிகச்சிறப்பாக ஆடி அரைசதம் அடித்த அக்ஸர் படேல் 74 ரன்களை அடிக்க, அவரது பொறுப்பான பேட்டிங்கால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 262 ரன்களை குவித்தது. 

ஒரு ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 2ம் நாள் ஆட்ட முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 61 ரன்கள் அடித்துள்ளது. 

இந்த போட்டியில் விராட் கோலியின் விக்கெட் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ரோஹித்(32), ராகுல்(17), புஜாரா(0), ஷ்ரேயாஸ் ஐயர்(4) ஆகியோர் சோபிக்காத நிலையில், நிதானமாக நின்று சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த கோலி 44 ரன்களுக்கு குன்னெமன் சுழலில் அவுட்டானார். அம்பயர் எல்பிடபிள்யூ கொடுக்க, அதை ரிவியூ செய்தார் கோலி.

ரிவியூவில், பேட் மற்றும் கால்காப்பில் ஒரே சமயத்தில் பந்து பட்டது. பேட்டில் முதலில் பட்டதா அல்லது கால்காப்பில் பட்டதா என்பதை டிவி அம்பயரால் திடமாக முடிவு செய்ய முடியவில்லை. மீண்டும் மீண்டும் ரிவியூ செய்தாலும் தீர்க்கமான முடிவிற்கு வரமுடியவில்லை. கள நடுவர் அவுட் கொடுத்ததால் கடைசியில் டிவி அம்பயரும் அவுட்டே கொடுத்தார். சந்தேகத்தின் பலனை பேட்ஸ்மேனுக்கு சாதகமாக்கி அவுட் இல்லை என்றும் கொடுத்திருக்கலாம். இதுமாதிரியான தருணங்களில் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாகத்தான் முடிவு வழங்கப்படும். ஆனால் டிவி அம்பயர் அவுட் கொடுத்தார்.

IND vs AUS: அரைசதம் அடித்து இந்திய அணியை காப்பாற்றிய அக்ஸர் படேல்..! முதல் இன்னிங்ஸில் ஆஸி., முன்னிலை

இது அவுட்டில்லை என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து கூறிவருகின்றனர். இந்திய டெஸ்ட் அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர், இது அவுட்டில்லை. இதில் சந்தேகம் இருக்கிறது என்றார். விராட் கோலியும் அந்த வீடியோவை டிரெஸிங் ரூமில் பார்த்துவிட்டு கடும் அதிருப்தியடைந்தார். 
 

click me!