
மகளிர் டி20 உலக கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. ஆஸ்திரேலியா, இலங்கை, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, வங்கதேசம் ஆகிய 5 அணிகளும் க்ரூப் ஏ-வில் உள்ளன. க்ரூப் ஏ-வில் ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களில் உள்ளன.
இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து ஆகிய 5 அணிகளும் க்ரூப் பி-யில் உள்ளன. க்ரூப் பி-யில் ஆடிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்ற இங்கிலாந்து மற்றும் இந்தியா அணிகள் புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களில் உள்ளன.
ஆடிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்தியா - இங்கிலாந்து அணிகள் இருவரில் யார் பெரியவர் என்பதை தீர்மானிக்கும் நீயா நானா போட்டியில் இன்று மோதுகின்றன. இங்கிலாந்துக்கு எதிரான இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.
இந்திய மகளிர் அணி:
ஷஃபாலி வெர்மா, ஸ்மிரிதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மன்ப்ரீத் கௌர் (கேப்டன்), ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), ஷிகா பாண்டே, தீப்தி ஷர்மா, பூஜா வஸ்ட்ராகர், ராதா யாதவ், ராஜேஷ்வரி கெய்க்வாட், ரேணுகா சிங்.
இங்கிலாந்து மகளிர் அணி:
சோஃபியா டன்க்லி, டேனியல் வியாட், அலைஸ் கேப்ஸி, நாட் ஸ்கைவர் பிரண்ட், ஹீதர் நைட் (கேப்டன்), எமி ஜோன்ஸ் (விக்கெட் கீப்பர்), கேத்ரின் பிரண்ட், சோஃபி எக்லெஸ்டோன், சார்லோட் டீன், சாரா க்ளென், லாரன் பெல்.