PSL 2023: ரைலீ ரூசோ வேற லெவல் பேட்டிங்.. பெஷாவர் ஸால்மியை வீழ்த்தி முல்தான் சுல்தான்ஸ் அபார வெற்றி

Published : Feb 17, 2023, 10:48 PM IST
PSL 2023: ரைலீ ரூசோ வேற லெவல் பேட்டிங்.. பெஷாவர் ஸால்மியை வீழ்த்தி முல்தான் சுல்தான்ஸ் அபார வெற்றி

சுருக்கம்

பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் பெஷாவர் ஸால்மி அணியை 56  ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முல்தான் சுல்தான்ஸ் அபார வெற்றி பெற்றது.  

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. முல்தானில் இன்று நடந்த போட்டியில் முல்தான் சுல்தான்ஸ் மற்றும் பெஷாவர் ஸால்மி அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெஷாவர் ஸால்மி அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.

முல்தான் சுல்தான்ஸ் அணி:

ஷான் மசூத், முகமது ரிஸ்வான் (கேப்டன், விக்கெட் கீப்பர்), ரைலீ ரூசோ, டேவிட் மில்லர், கைரன் பொல்லார்டு, குஷ்தில் ஷா, கார்லாஸ் பிராத்வெயிட், உஸாமா மிர், அப்பாஸ் அஃப்ரிடி, சமீன் குல், ஈசானுல்லா.

IND vs AUS: டெஸ்ட் கிரிக்கெட்டில் ஸ்மித்தை வைத்து அஷ்வின் செய்த தரமான சம்பவம்..!

பெஷாவர் ஸால்மி அணி:

முகமது ஹாரிஸ் (விக்கெட் கீப்பர்), பாபர் அசாம் (கேப்டன்), சயீம் ஆயுப், டாம் கோலர் காட்மோர், பானுகா ராஜபக்சா, ரோவ்மன் பவல், ஜேம்ஸ் நீஷம், வஹாப் ரியாஸ், குராம் ஷேஷாத், சல்மான் இர்ஷாத், சுஃபியான் முகீம்.

முதலில் பேட்டிங் ஆடிய முல்தான் சுல்தான்ஸ் அணியின் தொடக்க வீரர் முகமது ரிஸ்வான் மற்றும் 3ம் வரிசையில் இறங்கிய ரைலீ ரூசோ ஆகிய இருவரும் அபாரமாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தனர். ரிஸ்வான் 42 பந்தில் 66 ரன்கள் அடித்தார். காட்டடி அடித்த ரூசோ 36 பந்தில் 12 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 75 ரன்களை குவிக்க, 20 ஓவரில் முல்தான் சுல்தான்ஸ் அணி 210 ரன்கள் அடித்தது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய மைல்கல்..! கபில் தேவ், இம்ரான் கான் ஆகிய லெஜண்ட்ஸ் சாதனையை முறியடித்தார் ஜடேஜா

211 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய பெஷாவர் ஸால்மி அணியில் தொடக்க வீரர் முகமது ஹாரிஸ் அதிரடியாக ஆடி 23 பந்தில் 40 ரன்கள் அடித்தார். சயிம் அயூப் அரைசதம் அடித்தார். ஆனால் அவர் 53 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பின்னர் மிடில் ஆர்டர் பேட்டிங் மளமளவென சரிந்ததால் 18.5 ஓவரில் 154 ரன்களுக்கு பெஷாவர் அணி ஆல் அவுட்டாக, 56 ரன்கள் வித்தியாசத்தில் முல்தான் சுல்தான்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
 

PREV
click me!

Recommended Stories

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும்..! ஆர்சிபி ரசிகர்களுக்கு குட் நியூஸ்!
ஆஷஸ் 2வது டெஸ்ட்.. இங்கிலாந்தை மீண்டும் அசால்ட்டாக ஊதித்தள்ளிய ஆஸ்திரேலியா.. பிரம்மாண்ட வெற்றி!