
மகளிர் டி20 உலக கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. க்ரூப் ஏ-வில் ஆஸ்திரேலியா, இலங்கை, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்கதேசம் ஆகியா 5 அணிகளும், க்ரூப் பி-யில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து ஆகிய 5 அணிகளும் இடம்பெற்று ஆடிவருகின்றன.
க்ரூப் ஏ-வில் இடம்பெற்றுள்ள நியூசிலாந்து - வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று நடந்தது. இதற்கு முன் ஆடிய முதல் 2 போட்டிகளிலும் தோற்றிருந்த நியூசிலாந்து அணி முதல் வெற்றியை பெறும் முனைப்பில் இன்று களமிறங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
IND vs AUS: டெஸ்ட் கிரிக்கெட்டில் ஸ்மித்தை வைத்து அஷ்வின் செய்த தரமான சம்பவம்..!
முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீராங்கனைகள் பேட்ஸ் மற்றும் பெர்னாடைன் ஆகிய இருவரும் இணைந்து அபாரமாக பேட்டிங் ஆடி முதல் விக்கெட்டுக்கு 77 ரன்கள் அடித்தனர். பெர்னாடைன் 44 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 3ம் வரிசையில் இறங்கிய அமெலியா கெர் 16 ரன்களுக்கு ஆட்டமிழக்க, கேப்டன் டிவைன் ரன்னே அடிக்காமல் டக் அவுட்டானார்.
தொடக்க வீராங்கனை பேட்ஸ் அபாரமாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். அதிரடியாக ஆடிய பேட்ஸ் 61 பந்தில் 81 ரன்கள் அடித்தார். மேடி க்ரீன் காட்டடி அடித்து 20 பந்தில் 44 ரன்களை விளாச, 20 ஓவரில் நியூசிலாந்து அணி 189 ரன்கள் அடித்தது.
190 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய வங்கதேச அணி வீராங்கனைகள் தொடக்கம் முதலே சொற்ப ரன்களுக்கு சீரான இடைவெளியில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அந்த அணியில் அதிகபட்சமாக மிடில் ஆர்டர் வீராங்கனை ஷொர்னா அக்தெர் 31 ரன்கள் அடித்தார். மற்ற அனைவருமே சொற்ப ரன்களுக்கு அவுட்டாக, 20 ஓவரில் வங்கதேச அணி 118 ரன்கள் மட்டுமே அடித்தது.
71 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து மகளிர் அணி அபார வெற்றி பெற்றது.