ஐபிஎல் 16வது சீசனுக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. முதல் போட்டி வரும் மார்ச் 31ம் தேதி தொடங்குகிறது.
ஐபிஎல்லில் 15 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ள நிலையில், ஐபிஎல் 16வது சீசன் வரும் மார்ச் 31ம் தேதி தொடங்குகிறது. 10 அணிகள் மோதும் ஐபிஎல் 16வது சீசனுக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
வரும் மார்ச் 31ம் தேதி தொடங்கும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணி, 4 முறை சாம்பியன் சிஎஸ்கே அணியுடன் மோதுகிறது. இந்த முதல் போட்டி அகமதாபாத்தில் நடக்கிறது. இறுதிப்போட்டியும் அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் தான் நடக்கிறது.
மார்ச் 31ம் தேதி தொடங்கும் ஐபிஎல் தொடர் மே 21ம் தேதி முடிகிறது. மே 21ம் தேதி அகமதாபாத்தில் இறுதிப்போட்டி நடக்கிறது. லீக் சுற்றில் 70 போட்டிகள் நடக்கின்றன. சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், மும்பை, கொல்கத்தா, லக்னோ, டெல்லி, அகமதாபாத், ஜெய்ப்பூர், மொஹாலி ஆகிய நகரங்களில் ஐபிஎல் போட்டிகள் நடக்கின்றன. கவுஹாத்தி மற்றும் தர்மசாலா ஆகிய 2 நகரங்களிலும் சில போட்டிகள் நடக்கின்றன.
மார்ச் 31: சிஎஸ்கே - குஜராத் டைட்டன்ஸ்
ஏப்ரல் 1: பஞ்சாப் கிங்ஸ் - கேகேஆர்
ஏப்ரல் 1: டெல்லி கேபிடள்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்
ஏப்ரல் 2: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ராஜஸ்தான் ராயல்ஸ்
ஏப்ரல் 2: ஆர்சிபி - மும்பை இந்தியன்ஸ்
மார்ச் 26ம் தேதி மகளிர் பிரீமியர் லீக்கின் முதல் சீசன் தொடங்கும் நிலையில், மார்ச் 31ம் தேதி ஐபிஎல் தொடர் தொடங்குகிறது.
செல்ஃபி எடுக்க மறுத்த பிரித்வி ஷா கார் மீது தாக்குதல்..! போலீஸார் வழக்குப்பதிவு