பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் காலின் முன்ரோவின் அதிரடி அரைசதத்தால் கராச்சி கிங்ஸை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இஸ்லாமாபாத் யுனைடெட் அணி அபார வெற்றி பெற்றது.
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. முதல் போட்டியில் தோல்வியடைந்த கராச்சி கிங்ஸ் அணி, 2வது போட்டியிலாவது வெற்றி பெறும் முனைப்பில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இஸ்லாமாபாத் யுனைடெட் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
இஸ்லாமாபாத் யுனைடெட் அணி:
ஹசன் நவாஸ், பால் ஸ்டர்லிங், காலின் முன்ரோ, ராசி வாண்டர்டசன், ஷதாப் கான் (கேப்டன்), அசாம் கான் (விக்கெட் கீப்பர்), ஆசிஃப் அலி, ஃபஹீம் அஷ்ரஃப், டாம் கரன், முகமது வாசிம், ருமான் ரயீஸ்.
IND vs AUS: ஷமி, அஷ்வின், ஜடேஜா அபாரம்.. ஆஸ்திரேலியாவை குறைவான ஸ்கோருக்கு சுருட்டியது இந்திய அணி
கராச்சி கிங்ஸ் அணி:
ஜேம்ஸ் வின்ஸ், ஷர்ஜீல் கான், ஹைதர் அலி, ஷோயப் மாலிக், மேத்யூ வேட் (விக்கெட் கீப்பர்), இமாத் வாசிம் (கேப்டன்), இர்ஃபான் கான், ஜேம்ஸ் ஃபுல்லர், ஆண்ட்ரூ டை, முகமது அமீர், முகமது மூசா.
முதலில் பேட்டிங் ஆடிய கராச்சி கிங்ஸ் அணியின் தொடக்க வீரர் ஷர்ஜீல் கான் 34 ரன்கள் அடித்தார். 3ம் வரிசையில் இறங்கிய ஹைதர் அலி அபாரமாக ஆடி அரைசதம் அடித்தார். ஹைதர் அலி 59 ரன்கள் அடித்தார். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்கத்திலோ அல்லது பதின்களிலோ ஆட்டமிழக்க, 20 ஓவரில் 173 ரன்கள் அடித்தது கராச்சி கிங்ஸ் அணி.
174 ரன்கள் என்ற சவாலான இலக்கை விரட்டிய இஸ்லாமாபாத் யுனைடெட் அணியின் தொடக்க வீரர்கள் பால் ஸ்டர்லிங் (4) மற்றும் ஹசன் நவாஸ்(7) ஆகிய இருவரும் இற்றை இலக்கத்தில் வெளியேறினர். 3ம் வரிசையில் இறங்கிய வாண்டர்டசன் 31 ரன்கள் அடித்தார். 4ம் வரிசையில் இறங்கிய காலின் முன்ரோ அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். 28 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 58 ரன்களை விளாச, அசாம் கான் 28 பந்தில் 44 ரன்கள் அடிக்க, 19வது ஓவரில் இலக்கை அடித்து இஸ்லாமாபாத் யுனைடெட் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.