மகளிர் டி20 உலக கோப்பை: 5 விக்கெட் வீழ்த்தி அசத்திய ரேணுகா சிங்..! சவாலான இலக்கை நிர்ணயித்த இங்கிலாந்து

Published : Feb 18, 2023, 08:40 PM IST
மகளிர் டி20 உலக கோப்பை: 5 விக்கெட் வீழ்த்தி அசத்திய  ரேணுகா சிங்..! சவாலான இலக்கை நிர்ணயித்த இங்கிலாந்து

சுருக்கம்

மகளிர் டி20 உலக கோப்பையில் இந்தியாவிற்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி 20 ஓவரில் 151 ரன்கள் அடித்து, 152 ரன்கள் என்ற சவாலான இலக்கை இந்திய அணிக்கு நிர்ணயித்துள்ளது.  

மகளிர் டி20 உலக கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், க்ரூப் பி-யில் ஆடிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களில் இருக்கும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இன்றைய போட்டியில் ஆடிவருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. 

இந்திய மகளிர் அணி:

ஷஃபாலி வெர்மா, ஸ்மிரிதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மன்ப்ரீத் கௌர் (கேப்டன்), ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), ஷிகா பாண்டே, தீப்தி ஷர்மா, பூஜா வஸ்ட்ராகர், ராதா யாதவ், ராஜேஷ்வரி கெய்க்வாட், ரேணுகா சிங்.

IND vs AUS: உன் பேட்டிங்கில் இதுதான்டா தம்பி பெரிய பிரச்னையே..! அதை சரி செய்.. ராகுலுக்கு கவாஸ்கர் அட்வைஸ்

இங்கிலாந்து மகளிர் அணி:

சோஃபியா டன்க்லி, டேனியல் வியாட், அலைஸ் கேப்ஸி, நாட் ஸ்கைவர் பிரண்ட், ஹீதர் நைட் (கேப்டன்), எமி ஜோன்ஸ் (விக்கெட் கீப்பர்), கேத்ரின் பிரண்ட், சோஃபி எக்லெஸ்டோன், சார்லோட் டீன், சாரா க்ளென், லாரன் பெல்.
 
முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணியின் டாப் 3 வீராங்கனைகளையும் இந்திய ஃபாஸ்ட் பவுலர் ரேணுகா சிங் வீழ்த்தினார். சோஃபியா(10), வியாட்(0), அலைஸ்(3)ஆகிய மூவரையும் தொடக்கத்திலேயே ரேணுகா சிங் வீழ்த்தினார். 4ம் வரிசையில் ஆடிய அந்த அணியின் நட்சத்திர வீராங்கனை நாட் பிரண்ட் அபாரமாக ஆடி அரைசதம் அடித்தார். 50 ரன்களுக்கு அவரை தீப்தி ஷர்மா வெளியேற்றினார்.

கேப்டன் ஹீதர் நைட் 28 ரன்களும், அடித்து ஆடிய எமி ஜோன்ஸ் 27 பந்தில் 40 ரன்களும் அடிக்க, 20 ஓவரில் இங்கிலாந்து அணி 151 ரன்கள் அடித்து, இந்திய அணிக்கு 152 ரன்கள் என்ற சவாலான இலக்கை நிர்ணயித்துள்ளது.

IND vs AUS: அரைசதம் அடித்து இந்திய அணியை காப்பாற்றிய அக்ஸர் படேல்..! முதல் இன்னிங்ஸில் ஆஸி., முன்னிலை

இந்திய அணி சார்பில் அபாரமாக பந்துவீசிய ரேணுகா சிங் 4 ஓவரில் 15 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார்.
 

PREV
click me!

Recommended Stories

IND vs ENG 1st T20: இந்திய அணியில் 4 வீரர்கள் அதிரடி நீக்கம்! சஞ்சு சாம்சனுமா? பிளேயிங் லெவன்!
IRE vs IND T20: இந்தியாவின் மோசமான தோல்விக்கு 5 பெரும் காரணங்கள்! இந்த' 2 வீரர்கள் படுமோசம்!