அயர்லாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் களமிறங்கும் இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
ஹர்திக் பாண்டியா தலைமையில் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி அயர்லாந்தில் 2 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. முதல் டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
2வது டி20 போட்டி இன்று நடக்கிறது. இந்திய நேரப்படி இரவு 9 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இந்த போட்டியில் களமிறங்கும் இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
இதையும் படிங்க - T20 WC இந்திய அணியிலிருந்து தூக்கி எறியப்படும் ரோஹித், கோலி, ராகுல்..? அணியின் நலன் கருதி அதிரடி முடிவு
இந்திய அணியின் ஆடும் லெவன் காம்பினேஷனில் ஒரு மாற்றம் மட்டும் இருக்கும். கடந்த போட்டியில் காலில் ஏற்பட்ட காயத்தால் இந்திய அணியின் தொடக்க வீரராக எடுக்கப்பட்டிருந்த ருதுராஜ் கெய்க்வாட் பேட்டிங் ஆடவில்லை. அதனால் அவருக்கு பதிலாக தீபக் ஹூடா ஓபனிங்கில் ஆடினார். அவர் காயத்திலிருந்து மீண்டிருக்க வாய்ப்பில்லை. எனவே அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சன் ஓபனிங்கில் ஆட வாய்ப்பு பெறலாம்.
இதையும் படிங்க - பையன் செம டேலண்ட்.. ஐபிஎல்லில் கண்டிப்பா ஆடுவான்! அயர்லாந்து இளம் வீரருக்கு பேட் கொடுத்து புகழ்ந்த பாண்டியா
அந்த ஒரு மாற்றத்தைத்தவிர வேறு மாற்றம் செய்ய வாய்ப்பில்லை என்பதால் ராகுல் திரிபாதி அவருக்கான வாய்ப்புக்காக காத்திருக்கத்தான் வேண்டும்.
இதையும் படிங்க - IRE vs IND டி20: இத்தனை வருஷமா தோனி, கோலி, ரோஹித் செய்யாத சாதனையை செய்த ஹர்திக் பாண்டியா
உத்தேச இந்திய அணி:
சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், தீபக் ஹூடா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), அக்ஸர் படேல், புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சாஹல், ஆவேஷ் கான், உம்ரான் மாலிக்.