WI vs IND 5 T20 Matches: வரலாற்றில் முதல் முறை: 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இழந்த இந்தியா!

By Rsiva kumar  |  First Published Aug 14, 2023, 12:47 PM IST

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்தியா 2-3 என்ற கணக்கில் முதல் முறையாக இழந்துள்ளது.


இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் தொடரைத் தொடர்ந்து 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடந்தது. இதில், வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் 2 டி20 போட்டிகளில் வெற்றி பெற்று 2-0 என்று முன்னிலை வகித்தது. பின்னர் நடந்த 2 போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று 2-2 என்று 5 போட்டிகள் கொண்ட தொடரை சமன் செய்தது.

WI vs IND T20 Series: வெஸ்ட் இண்டீஸ் டூர் உணர்த்திய பாடம் என்ன தெரியுமா? சாம்சனுக்கு இரக்கம் காட்டியது போதும்!

Tap to resize

Latest Videos

இதையடுத்து வெற்றியை தீர்மானிக்கும் 5ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று நடந்தது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் ஆடி 165 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர், ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 18 ஓவர்களில் ஒரு விக்கெட் மட்டுமே இழந்து 171 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

வேஷ்டி குர்தாவில் சென்று குடும்பத்தோடு ஏழுமலையானை தரிசனம் செய்த ரோகித் சர்மா!

அதோடு, 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரை 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது. அதுமட்டுமின்றி 17 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக இந்தியாவிற்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றி வெஸ்ட் இண்டீஸ் அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது. ஆனால், இந்திய அணியோ, கடைசியாக விளையாடிய 13 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் முறையாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இழந்துள்ளது. கடைசியாக விளையாடிய 13 தொடர்களில் 11 முறை டி20 தொடரை கைப்பற்றியுள்ளது. ஒரேயொரு முறை டிரா ஆகியுள்ளது. ஆனால், முதல் முறையாக தொடரை இழந்துள்ளது.

WI vs IND: தப்பு மேல தப்பு பண்ணிய ஹர்திக் பாண்டியா – 13 சீரிஸ்களில் முதல் முறையாக டி20 தொடரை இழந்த இந்தியா!

இவ்வளவு ஏன், வரலாற்றில் முதல் முறையாக இந்திய அணி 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரை இழப்பது இதுவே முதல் முறையாகும். இப்படியெல்லாம் இந்திய அணிக்கு மோசமான சாதனை படைக்க கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாக காரணமாக இருந்துள்ளார். ஆதலால், அவரை கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கி ஒரு பிளேயராக விளையாட வைக்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

கடைசி போட்டியில் தோற்ற இந்தியா: 17 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக டி20 தொடரை கைப்பற்றிய வெஸ்ட் இண்டீஸ்!

click me!