
இந்திய அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. முதலில் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடந்தது. அடுத்ததாக 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடக்கவுள்ளது.
ஒருநாள் தொடரில் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்திய அணி வெஸ்ட் இண்டீஸை ஒயிட்வாஷ் செய்து தொடரை வென்றது. முதலிரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், 3வது ஒருநாள் போட்டி நேற்று நடந்தது.
டிரினிடாட்டில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி ஷுப்மன் கில்லின் அபாரமான பேட்டிங்(98) மற்றும் ஷிகர் தவான் (58) மற்றும் ஷ்ரேயாஸ் ஐயரின் (44) பங்களிப்பால் ஒதுக்கப்பட்ட 36 ஓவரில் 225 ரன்களை குவித்தது.
இதையும் படிங்க - WI vs IND: 3வது ODIயிலும் அபார வெற்றி.. வெஸ்ட் இண்டீஸை ஒயிட்வாஷ் செய்து தொடரை வென்றது இந்தியா
டி.எல்.எஸ் முறைப்படி நிர்ணயிக்கப்பட்ட 257 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 26 ஓவரில் வெறும் 137 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து 119 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி, 3-0 என வெஸ்ட் இண்டீஸை ஒயிட்வாஷ் செய்து தொடரை வென்றது.
வெஸ்ட் இண்டீஸை ஒயிட்வாஷ் செய்ததன் மூலம் வரலாற்று சாதனை படைத்துள்ளது. ஒருநாள் கிரிக்கெட்டில் 2 முறை சாம்பியனான வெஸ்ட் இண்டீஸை இதற்கு முன் இந்திய அணி ஒருநாள் தொடரில் ஒயிட்வாஷ் செய்ததில்லை. ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் முறையாக வெஸ்ட் இண்டீஸை, அதுவும் அந்த அணியின் சொந்த மண்ணில் ஒயிட்வாஷ் செய்து வரலாற்று சாதனை படைத்துள்ளது இந்தியா.
இதையும் படிங்க - டி20 உலக கோப்பை ஃபைனலில் இந்த 2 அணிகள் தான் மோதும்! அதில் அந்த அணி ஜெயித்து கோப்பையை வெல்லும்- பாண்டிங் ஆருடம்
மேலும் இந்திய அணிக்கு ஒருநாள் தொடரில் 13வது ஒயிட்வாஷ் இதுவாகும். அதுமட்டுமல்லாது ஜிம்பாப்வே மற்றும் இலங்கைக்கு அடுத்து ஒருநாள் தொடரில் வெளிநாட்டில் 3வது ஒயிட்வாஷ் இது.