
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்திய அணி 2-0 என ஒருநாள் தொடரை வென்றுவிட்டது. கடைசி ஒருநாள் போட்டி நாளை டிரினிடாட்டில் நடக்கிறது.
அந்த போட்டியிலும் வெற்றி பெற்று வெஸ்ட் இண்டீஸை ஒயிட்வாஷ் செய்தால், ஒருநாள் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸை முதல் முறையாக ஒயிட்வாஷ் செய்த சாதனையை இந்திய அணி படைக்கும்.
இதையும் படிங்க - டி20 உலக கோப்பை ஃபைனலில் இந்த 2 அணிகள் தான் மோதும்! அதில் அந்த அணி ஜெயித்து கோப்பையை வெல்லும்- பாண்டிங் ஆருடம்
ஒருநாள் கிரிக்கெட்டில் 2 முறை சாம்பியனான வெஸ்ட் இண்டீஸை இதுவரை இந்திய அணி ஒருநாள் தொடரில் ஒயிட்வாஷ் செய்ததில்லை. எனவே கடைசி ஒருநாள் போட்டியில் ஜெயித்தால் இந்திய அணி சாதனை படைக்கும்.
மேலும் இந்திய அணிக்கு ஒருநாள் தொடரில் 13வது ஒயிட்வாஷ் இதுவாக அமையும். அதுமட்டுமல்லாது ஜிம்பாப்வே மற்றும் இலங்கைக்கு அடுத்து ஒருநாள் தொடரில் வெளிநாட்டில் 3வது ஒயிட்வாஷாக இது அமையும்.
இதையும் படிங்க - டி20 உலக கோப்பையை தூக்கியே ஆகணும்.. இந்திய அணியின் மாஸ்டர் ஸ்ட்ரோக்..! மனவள பயிற்சியாளராக பாடி அப்டான் நியமனம்
இந்த தொடரை வென்றதன் மூலம், ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக எதிராக அதிகமான ஒருநாள் தொடர்களை(12) தொடர்ச்சியாக வென்ற அணி என்ற சாதனையை படைத்த இந்திய அணி, இன்னும் சில சாதனைகளை படைக்க தயாராகிக்கொண்டிருக்கிறது.