TNPL 2022: அருண் கார்த்திக் பொறுப்பான பேட்டிங்.. குறைவான ரன் அடித்த மதுரை.. ஆனால் கோவைக்கு இதுவே கடின இலக்கு

Published : Jul 26, 2022, 09:17 PM IST
TNPL 2022: அருண் கார்த்திக் பொறுப்பான பேட்டிங்.. குறைவான ரன் அடித்த மதுரை.. ஆனால் கோவைக்கு இதுவே கடின இலக்கு

சுருக்கம்

லைகா கோவை கிங்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய மதுரை பாந்தர்ஸ் அணி 20 ஓவரில் 126 ரன்கள் அடித்து, 127 ரன்கள் என்ற இலக்கை கோவை அணிக்கு நிர்ணயித்துள்ளது.  

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரின் 6வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சேலத்தில் இன்று நடந்துவரும் எலிமினேட்டர் போட்டியில் மதுரை பாந்தர்ஸும் லைகா கோவை கிங்ஸும் ஆடிவருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற மதுரை பாந்தர்ஸ் அணி முதலில் பேட்டிங் ஆடியது.

மதுரை பாந்தர்ஸ் அணி:

அருண் கார்த்திக், வி ஆதித்யா, பால்சந்தர் அனிருத், ஜெகதீசன் கௌசிக், ரித்திக் ஈஸ்வரன் (விக்கெட் கீப்பர்), என்.எஸ்.சதுர்வேத் (கேப்டன்), சன்னி சந்து, பி சரவணன், கிரன் ஆகாஷ், வருண் சக்கரவர்த்தி, வி கௌதம்.

இதையும் படிங்க - டி20 உலக கோப்பை ஃபைனலில் இந்த 2 அணிகள் தான் மோதும்! அதில் அந்த அணி ஜெயித்து கோப்பையை வெல்லும்- பாண்டிங் ஆருடம்

லைகா கோவை கிங்ஸ் அணி:

கங்கா ஸ்ரீதர் ராஜு, சுரேஷ் குமார் (விக்கெட் கீப்பர்), சாய் சுதர்சன், ஷாருக்கான் (கேப்டன்), அபிஷேக் தன்வார், முகிலேஷ், ஷிஜித் சந்திரன், பாலு சூர்யா, அஜித் ராம், திவாகர், மனிஷ் ரவி.

முதலில் பேட்டிங் ஆடிய மதுரை பாந்தர்ஸ் அணியின் தொடக்க வீரரும் நட்சத்திர வீரருமான அருண் கார்த்திக் ஒருமுனையில் நிலைத்து நிற்க மறுமுனையில் மற்ற அனைத்து வீரர்களும் சீரான இடைவெளியில் சொற்ப ரன்களுக்கு அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 

ஆனால் இந்த போட்டி நடந்துவரும் சேலம் ஆடுகளத்தில் முதலில் பேட்டிங் ஆடி 120-130 ரன்கள் அடித்த அணிகள் வெற்றி பெற்றிருக்கின்றன. அதனால் அதுவே போதுமான ஸ்கோர் என்பதை அறிந்ததால், அவசரப்படாமல் நிதானமாக ஆடினார் அருண் கார்த்திக். 51 பந்தில் 47 ரன்கள் அடித்து கடைசிவரை களத்தில் நின்றார். அவரைத்தவிர மற்றவர்கள் சொற்ப ரன்களுக்கு வெளியேறினார். அதிரடி வீரரான அருண் கார்த்திக் கடைசி வரை களத்தில் நின்றுமே அவரால் அரைசதம் அடிக்க முடியவில்லை.

இதையும் படிங்க - டி20 உலக கோப்பையை தூக்கியே ஆகணும்.. இந்திய அணியின் மாஸ்டர் ஸ்ட்ரோக்..! மனவள பயிற்சியாளராக பாடி அப்டான் நியமனம்

ஆனால் அணியின் நலன் கருதி, அவசரப்படாமல் பொறுமை காத்த அருண் கார்த்திக், மதுரை அணியை 126 ரன்களை எட்டச்செய்தார். 127 ரன்கள் என்பதே இந்த ஆடுகளத்தில் கடினமான இலக்கே. இந்த போட்டியில் தோற்கும் அணி தொடரைவிட்டு வெளியேறும். நாக் அவுட் போட்டி என்பதால் இரு அணிகளுமே வெற்றிக்கு போராடும்.
 

PREV
click me!

Recommended Stories

Ind Vs SA 1st T20: கில், பாண்டியா கம்பேக்.. புல் போர்சுடன் களம் இறங்கும் இந்திய அணி..!
பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டிகள் நடக்கும்..! ஆர்சிபி ரசிகர்களுக்கு குட் நியூஸ்!