இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான கடைசி டி20 போட்டி இன்று இரவு 8 மணிக்கு நடக்கிறது.
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி முதலில் 1-0 என்று டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. அதன் பிறகு 2-1 என்று ஒரு நாள் தொடரை கைப்பற்றியது. இதையடுத்து 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடந்து வருகிறது. இதில், முதலில் 2 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற்றது. அதன் பிறகு நடந்த 2 போட்டிகளிலும் இந்தியா வெற்ற் பெற்று தொடரை சமன் செய்தது.
எல்இடி ஸ்டெம்புகள் விலை தெரியுமா? 10க்கும் மேற்பட்ட ஆப்பிள் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் விலையை விட அதிகமா?
இந்த நிலையில், தான் தொடரை தீர்மானிக்கும் கடைசி மற்றும் 5ஆவது டி20 போட்டி இன்று இரவு 8 மணிக்கு நடக்கிறது. இதில், இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அமெரிக்காவில் ஃபுளோரிடாவின் லாடர்ஹில்லில் உள்ள மைதானத்தில் நடந்த டி20 போட்டிகளில் இந்தியா தான் வெற்றி பெற்றிருக்கிறது.
ஸ்பின் ஓவர்களில் ரன்கள் குவிக்க தவறியதே தோல்விக்கு காரணம் – ரோவ்மன் பவல்!
இதுவரையில் லாடர்ஹில் ஒரு டி20 போட்டியில் கூட வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெறவில்லை. மேலும், நேற்றைய போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து 178 ரன்கள் எடுத்தது. அதன் பிறகு ஆடிய இந்தியா 179 ரன்கள் எடுத்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நேற்று நடந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 3 மாற்றங்களை செய்தது. எனினும், வெற்றி பெறவில்லை. ஆனால், இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
இன்று நடக்கும் போட்டியில் கூட இந்தியா அதே டீமுடன் களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், ஹர்திக் பாண்டியா தான் தனது முடிவில் சரியாக இருக்க வேண்டும். நேற்று நடந்த போட்டியில் முதலில் அக்ஷர் படேலை ஓவர் போட வைத்தார். அந்த ஓவரில் மட்டும் வெஸ்ட் இண்டீஸ் அணி 14 ரன்கள் எடுத்தது. 2ஆவது ஓவரை அர்ஷ்தீர்ப் சிங் வீசினார். அந்த ஓவரில் ஒரு விக்கெட் கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா உத்தேச அணி:
யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா (கேப்டன்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), அக்ஷர் படேல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சஹால், முகேஷ் குமார்.