உலகக் கோப்பை 2023 தொடருக்கு பயன்படுத்தப்படும் எல்இடி ஸ்டெம்புகளின் விலையானது 10க்கும் மேற்பட்ட ஆப்பிள் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் விலையை விட என்று கூறப்படுகிறது.
இந்தியாவில் நடத்தப்படும் உலகக் கோப்பை தொடரானது வரும் அக்டோபர் 5 ஆம் தேதி முதல் நவம்பர் 19 ஆம் தேதி வரையில் நடக்கிறது. இதற்காக இந்திய அணி தயாராகி வருகிறது. உலகக் கோப்பைக்கான அட்டவணையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டது. அக்டோபர் 15 ஆம் தேதி அகமபதாபாத் மைதானத்தில் நடக்க இருந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியானது நவம்பர் 14 ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. இப்படி சில போட்டிகள் மாற்றப்பட்டுள்ளது.
ஸ்பின் ஓவர்களில் ரன்கள் குவிக்க தவறியதே தோல்விக்கு காரணம் – ரோவ்மன் பவல்!
ஆண்டுதோறும் கிரிக்கெட் விளையாட்டில் மாற்றங்களை கொண்டு வரும் ஐசிசி சில ஆண்டுகளுக்கு முன்பு எல்இடி ஸ்டெம்புகளை கொண்டு வந்தது. ஆனால், விலை குறித்து தான் பலரால் அறியப்படவில்லை. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி ஒவ்வொரு போட்டியில் வெற்றி பெற்ற பிறகு ஸ்டெம்புகளை ஸ்டெம்புகளை எடுத்துச் செல்வதை வாடிக்கையாக கொண்டிருந்தார். அப்படிப்பட்ட ஸ்டெம்புகளின் விலை தான் அதிர்ச்சி அடையச் செய்கிறது.
ஐசிசி வழக்கமாக ஜிங் தயாரித்த ஸ்டெம்புகள் மற்றும் பெயில்களைப் பயன்படுத்துகிறது. இந்த விக்கெட்டுகள் தொடு உணர்திறன் கொண்டவை மற்றும் நடுவர் சரியான அழைப்பை எடுக்க உதவும் வகையில் பெயில்களில் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. ஆனால், உலகக் கோப்பையில் பயன்படுத்தப்படும் எல்இடி ஸ்டெம்புகள் மற்றும் பெயில்களின் விலையானது 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.32 முதல் 41 லட்சம் வரையில் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. எனினும், இந்த ஸ்டெம்புகளின் விலையானது, இடம், கிடைக்கும் தன்மை மற்றும் பிற காரணிகளைப் பொறுத்து மாறுபடலாம். ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பையில் ஸ்டெம்புகளின் விலையானது ரூ.10 – 12 லட்சங்களுக்கு மேல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது, 10 Apple iPhone 14 Pro Max போன்ஸ் விலையை விட அதிகமாகும்.
4ஆவது முறையாக சாம்பியனான இந்தியா – மலேசியாவிற்கு 2ஆவது இடம்!
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பயன்படுத்தப்படும் எல்இடி ஸ்டம்புகளின் சிறப்பு என்னவென்றால், அவை தொடு உணர்திறன் கொண்டவை, அவை ஒளிரும், நடுவர்களின் வேலையை எளிதாக்குகிறது. இது போன்ற எல்இடி ஸ்டெம்புகளில் பொருத்தப்பட்ட கேமரா மற்றும் மைக்ரோபோன் ஆகியவை போட்டிகளின் வெவ்வேறு கோணங்களை படம் பிடிக்க உதவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.