SRH vs MI போட்டிக்கும் சூர்யகுமார் யாதவ் இல்லையா? ஃபிட்னெஸ்க்கு அனுமதி மறுப்பு!

By Rsiva kumarFirst Published Mar 27, 2024, 4:52 PM IST
Highlights

சூர்யகுமார் யாதவ்விற்கு இதுவரையில் உடல் தகுதிக்கான சான்றிதழ் கிடைக்காத நிலையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் இடம் பெற வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.

கடந்த 22 ஆம் தேதி முதல் ஐபிஎல் 2024 தொடரின் 17ஆவது சீசன் நடைபெற்று வருகிறது. இதுவரையில் 5 முறை டிராபியை வென்ற மும்பை இந்தியன்ஸ் இந்த முறை டிராபியை கைப்பற்ற வேண்டும் என்ற குறிக்கோளுடன் அணியில் பல மாற்றங்களை செய்துள்ளது. இந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியில், ஜெரால்டு கோட்ஸி, முகமது நபி, தில்சன் மதுஷங்கா, நுவான் துஷாரா, ஷ்ரேயாஸ் கோபால், ஷிவாலிக் சர்மா, அன்ஷுல் கம்போஜ், நமன் திர் ஆகியோர் மும்பை இந்தியஸ் அணியில் ஏலம் எடுக்கப்பட்டுள்ளனர்.

பணம் சம்பாதிப்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கும் ஹர்திக் பாண்டியாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

மும்பை இந்தியன்ஸ் அணியில் திலக் வர்மா, டிம் டேவிட், இஷான் கிஷான், விஷ்ணு வினோத், அர்ஜூன் டெண்டுல்கர், சாம்ஸ் முலானி, நேஹல் வதேரா, ஜஸ்ப்ரித் பும்ரா, குமார் கார்த்திகேயா, பியூஷ் சாவ்லா, ஆகாஷ் மத்வால், ரொமாரியோ ஷெஃபெர்டு ஆகியோர் தக்க வைக்கப்பட்டனர். மும்பை அணியின் நம்பிக்கை நட்சத்திரமான சூர்யகுமார் யாதவ் இதுவரையில் அணியில் இடம் பெறவில்லை.

MI வீரர்களுக்கு பிரியாணி விருந்து கொடுத்த திலக் வர்மா – வைரலாகும் வீடியோ!

கடந்த ஆண்டு நடந்த தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக நடந்த டி20 போட்டியின் போது கணுக்கால் பகுதியில் காயம் அடைந்த நிலையில் ஜெர்மனி சென்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதைத் தொடர்ந்து நீண்ட நாள் ஓய்விற்கு பிறகு பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் சூர்யகுமார் யாதவ் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இதுவரையில் சூர்யகுமார் யாதவ் உடல் தகுதியை எட்டவில்லை. வரும் ஜூன் மாதம் டி20 உலகக் கோப்பை தொடர் தொடங்க உள்ள நிலையில், அவசரப்பட்டு அவரை களமிறக்க வேண்டாம் என்று மருத்துவர்கள் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

7 போட்டிகள் கொடுத்த ரிசல்ட் – பீதியில் இருக்கும் MI கேப்டன் ஹர்திக் பாண்டியா? ஹைதராபாத் யாருக்கு சாதகம்?

மேலும், அவருக்கு என்சிஏ இன்னும் முழு உடல் தகுதி பெற்றுள்ளதாக சான்றிதழ் அளிக்காத நிலையில், ஐபிஎல் தொடரில் இன்னும் பங்கேற்காமல் இருக்கிறார். இன்று நடக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம் பெற வாய்ப்பில்லை. மேலும் முதல் பாதி ஆட்டத்தில் சூர்யகுமார் யாதவ் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்று விளையாடி வரும் சூர்யகுமார் யாதவ் 2600 ரன்கள் எடுத்துள்ளார்.

ஏற்கனவே தோல்வி, இதுல அபராதம் வேறயா? சுப்மன் கில்லிற்கு ரூ.12 லட்சம் அபராதம்: ஏன் தெரியுமா?

இவ்வளவு ஏன், கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் சூர்யகுமார் யாதவ் இடம் பெற்று விளையாடி 600 ரன்கள் எடுத்துள்ளார். சூர்யகுமார் யாதவ் இல்லாதது ஏற்கனவே குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 6 ரன்களில் மும்பை தோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மும்பை இந்தியன்ஸ் போட்டிகள்:

மார்ச் 24: குஜராத் டைட்டன்ஸ் – மும்பை இந்தியன்ஸ் – அகமதாபாத் – இரவு 7.30 மணி

மார்ச் 27 – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – மும்பை இந்தியன்ஸ் – ஹைதராபாத் - இரவு 7.30 மணி

ஏப்ரல் 01 – ராஜஸ்தான் ராயல்ஸ் – மும்பை இந்தியன்ஸ் – மும்பை – இரவு 7.30 மணி

ஏப்ரல் 07 – டெல்லி கேபிடல்ஸ் - மும்பை இந்தியன்ஸ் – மும்பை – பிற்பகல் 3.30 மணி

ஏப்ரல் 11 – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – மும்பை இந்தியன்ஸ் – மும்பை – இரவு 7.30 மணி

ஏப்ரல் 14- சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் – மும்பை – இரவு 7.30 மணி

ஏப்ரல் 18 – பஞ்சாப் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் – மொகாலி – இரவு 7.30 மணி

ஏப்ரல் 22: ராஜஸ்தான் ராயல்ஸ் – மும்பை இந்தியன்ஸ் – ஜெய்ப்பூர் – இரவு 7.30 மணி

ஏப்ரல் 27: டெல்லி கேபிடல்ஸ் – மும்பை இந்தியன்ஸ் – டெல்லி – பிற்பகல் 3.30 மணி

ஏப்ரல் 30: லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் – மும்பை இந்தியன்ஸ் – லக்னோ – இரவு 7.30 மணி

மே 03: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – மும்பை இந்தியன்ஸ் – மும்பை – இரவு 7.30 மணி

மே 06: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – மும்பை இந்தியன்ஸ் – மும்பை – இரவு 7.30 மணி

மே 11: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – மும்பை இந்தியன்ஸ் – கொல்கத்தா – இரவு 7.30 மணி

மே 17: லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் – மும்பை இந்தியன்ஸ் – மும்பை – இரவு 7.30 மணி

MS Dhoni, IPL 2024: வயசு நம்பர் தானு நிரூபித்த தோனி – டைவ் அடித்து கேட்ச் பிடிக்க கொண்டாடி தீர்த்த ரசிகர்கள்!

click me!