சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்க ஹைதராபாத் வந்த மும்பை இந்தியன்ஸ் வீரர்களுக்கு திலக் வர்மா சர்பரைஸ் விருந்தாக ஹைதராபாத் பிரியாணி விருந்து கொடுத்துள்ளார்.
ஐபிஎல் 2024 கிரிக்கெட் திருவிழாவின் 8ஆவது திருவிழா இன்று ஹைதராபாத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இதற்காக நேற்று மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் ஹைதராபாத் புறப்பட்டு வந்தனர். அப்போது பேசிய மும்பை இந்தியன்ஸ் வீரர் திலக் வர்மா, அனைவருக்கும் சர்ஃபரைஸ் காத்துக் கொண்டிருக்கிறது. எனக்கு எப்போதும் மும்பை இந்தியன்ஸ் அணியை ரொம்பவே பிடிக்கும்.
இவர், தான் தனது குழந்தைப்பருவ பயிற்சியாளர். அவரை இங்கு பார்ப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறி அனைவருக்கும் ஹைதராபாத் பிரியாணி விருந்து கொடுத்து அசத்தியுள்ளார். இது தொடர்பான வீடியோவை எம்.ஐ. தங்களது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியானது தங்களது முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொண்டது. இந்தப் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் பும்ரா வேகத்தில் 168 ரன்களில் சரண்டரானது.
ஏற்கனவே தோல்வி, இதுல அபராதம் வேறயா? சுப்மன் கில்லிற்கு ரூ.12 லட்சம் அபராதம்: ஏன் தெரியுமா?
பின்னர் 169 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு மும்பை இந்தியன்ஸ் பேட்டிங் செய்தது. இதில், 162 ரன்கள் மட்டுமே மும்பை அணி எடுத்து 6 ரன்களில் தோல்வியைத் தழுவியது. இந்தப் போட்டியைத் தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் தங்களது 2ஆவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொளிறது. இந்தப் போட்டி ஹைதராபாத்தில் நடைபெறுகிறது.
खातिरदारी koi apne Tilak se seekhe 😋💙 | pic.twitter.com/LnWPtDyWkR
— Mumbai Indians (@mipaltan)