ஐபிஎல் 2024 தொடரில் இதுவரையில் நடந்த 7 போட்டிகளிலும் அந்தந்த ஹோம் அணி தான் வெற்றி பெற்றிருக்கிறது. இந்த நிலையில் தான் மும்பை இந்தியன்ஸ் தனது 2ஆவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை அதனின் ஹோம் மைதானமான ஹைதராபாத்தில் எதிர்கொள்கிறது.
ஐபிஎல் 2024 தொடரின் 17ஆவது சீசன் கடந்த 22 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரையில் 7 போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் நம்பர் 1 இடத்தில் உள்ளது. மேலும், இதுவரையில் நடந்த 7 போட்டிகளிலும் அந்தந்த ஹோம் மைதான அணியே வெற்றி பெற்றிருக்கிறது.
CSK vs RCB:
இதைத் தொடர்ந்து நடப்பு ஆண்டுக்கான முதல் போட்டி நடைபெற்றது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இந்தப் போட்டியில் சிஎஸ்கே 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதற்கு காரணம் சென்னையின் ஹோம் மைதானம். கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் தற்போது வரையில் ஆர்சிபிக்கு எதிராக செனையில் விளையாடிய எல்லா போட்டிகளிலும் சிஎஸ்கே வெற்றி பெற்றுள்ளது. 2008 ஆம் ஆண்டு மட்டும் ஆர்சிபி வெற்றி பெற்றுள்ளது.
DC vs PBKS:
பஞ்சாப் மாநிலம் மொஹாலியின் முல்லன்பூர் பகுதியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது. இதில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் புதிய ஹோம் மைதானம். இந்த மைதானத்தில் முதல் முறையாக ஐபிஎல் போட்டி நடத்தப்பட்டுள்ளது. இதில் பஞ்சாப் கிங்ஸ் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
KKR vs SRH:
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் தொடரின் 3ஆவது போட்டி நடைபெற்றது. இதில், வெற்றியின் விளிம்பு வரை வந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கடைசியில் 4 ரன்களில் தோல்வியை தழுவியது. இந்தப் போட்டியில் ஹர்ஷித் ராணா கடைசி ஓவரை சிறப்பாக வீசி கேகேஆர் வெற்றிக்கு வித்திட்டார்.
RR vs LSG:
ஜெய்ப்பூரில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான 4ஆவது போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் 193 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் 20 ரன்களில் தோல்வியை தழுவியது. இந்தப் போட்டியில் கடைசி ஓவரை ஆவேஷ் கான் சிறப்பாக வீசி ஆர்ஆர் வெற்றிக்கு வித்திட்டார்.
Gujarat Titans vs Mumbai Indians:
அகமதாபாத்தில் நடைபெற்ற 5ஆவது ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் 168 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் விளையாடிய பலம் வாய்ந்த மும்பை இந்தியன்ஸ் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து கடைசியில் 6 ரன்களில் தோல்வியை தழுவியது. இந்தப் போட்டியில் உமேஷ் யாதவ் கடைசி ஓவரை சிறப்பாக வீசி 2 விக்கெட்டுகள் கைப்பற்றி ஜிடி வெற்றிக்கு வித்திட்டார். இந்தப் போட்டியில் முதல் முறையாக கேப்டனான சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் வெற்றி வாகை சூடியது.
RCB vs PBKS:
பெங்களூரு சின்னச்சுவாமி மைதானத்தில் நடைபெற்ற 6ஆவது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவர்களில் 176 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு விராட் கோலி மற்றும் தினேஷ் கார்த்திக் இருவரும் அதிரடியாக அடித்துக் கொடுக்க ஆர்சிபி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சேப்பாக்கத்தில் நடந்த முதல் போட்டியில் ஆர்சிபி தோல்வி அடைந்திருந்தது. முல்லன்பூரில் நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
CSK vs GT:
சென்னை எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற 7ஆவது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது 206 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் 143 ரன்கள் மட்டுமே எடுத்து 63 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதற்கு முன்னதாக குஜராத்தின் கோட்டையான அகமதாபாத்தில் நடந்த 5ஆவது போட்டியில் குஜராத் 168 ரன்கள் எடுத்த போதிலும் 6 ரன்களில் வெற்றி பெற்றது. ஆனால், சேப்பாக்கத்தில் 143 ரன்கள் மட்டுமே எடுத்து 63 ரன்களில் தோல்வியை தழுவியது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – மும்பை இந்தியன்ஸ்
இதன் மூலமாக இதுவரையில் நடந்த 7 போட்டிகளிலும் அந்தந்த ஹோம் அணி தான் வெற்றி பெற்றிருக்கிறது. இதை வைத்து இன்று நடக்கும் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டி ஹைதராபாத்தில் நடைபெற உள்ள நிலையில் இது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இன்னும் வெற்றியை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.