ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஹாட்ரிக் டக் அவுட்டாகி விமர்சனத்திற்குள்ளான சூர்யகுமார் யாதவ் நேற்றைய போட்டியில் அரைசதம் அடித்து விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான முதல் ஒரு நாள் போட்டி நேற்று மொஹாலியில் நடந்தது. இதில், ஆஸ்திரேலியா முதலில் ஆடி 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 276 ரன்கள் எடுத்தது. இதில், டேவிட் வார்னர் அதிகபட்சமாக 52 ரன்கள் எடுத்தார். ஸ்டீவ் ஸ்மித் 41 ரன்கள் குவித்தார். இந்திய அணியைப் பொறுத்த வரையில் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
IND vs AUS: 27 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக மொஹாலியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா சாதனை!
பின்னர் கடின இலக்கை துரத்திய இந்திய அணிக்கு சுப்மன் கில் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் இருவரும் நல்ல தொடக்கம் அமைத்துக் கொடுத்தனர். இதில், கெய்க்வாட் 71 ரன்களில் ஆட்டமிழக்க, கில் 74 ரன்களில் ஆட்டமிழந்தார். ஷ்ரேயாஸ் ஐயர் 3 ரன்களில் வெளியேற சூர்யகுமார் யாதவ் களமிறங்கினார்.
இவர், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர்களில் வரிசையாக கோல்டன் டக் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். மும்பை, விசாகப்பட்டினம், சென்னை ஆகிய மைதானங்களில் நடந்த ஒருநாள் போட்டிகளில் சூர்யகுமார் யாதவ் வந்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார்.
Asian Games 2023 Table Tennis: பெண்களுக்கான டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியா வெற்றி!
இதன் மூலமாக விமர்சனத்திற்குள்ளான சூர்யகுமார் யாதவ், ஆஸ்திரேலியாவைக் கண்டால் அவருக்கு பயம் என்று என்றெல்லாம் விமர்சனம் செய்துள்ளனர். இந்த நிலையில், தான் மீண்டும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டி நேற்று நடந்தது. இதில், அவர் பேட்டிங் ஆடி தனது 3ஆவது அரைசதத்தை பதிவு செய்தார். சூர்யகுமார் யாதவ் 49 பந்துகளில் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து தனது ஹாட்ரிக் கோல்டன் டக்கிற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
இந்தப் போட்டியில் இந்தியா 5 விக்கெடுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதோடு, 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவை மொஹாலி மைதானத்தில் வீழ்த்தி சாதனை படைத்தது. மேலும், ஐசிசி ஆண்கள் ஒரு நாள் கிரிக்கெட் அணிகள் ரேங்கிங் பட்டியலில் இந்தியா நம்பர் 1 இடம் பிடித்துள்ளது.