ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான பரிசுத் தொகையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.
இந்தியாவில் 4ஆவது முறையாக நடக்கும் 13 ஆவது ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 தொடரானது வரும் அக்டோபர் 5 ஆம் தேதி பிரமாண்டமாக தொடங்குகிறது. இந்த தொடரில் இந்தியா, இலங்கை, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 10 அணிகள் இடம் பெற்று 10 மைதானங்களில் நடக்கும் இந்த உலகக் கோப்பை தொடர் வரும் நவம்பர் 19 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
Asian Games 2023 Table Tennis: பெண்களுக்கான டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியா வெற்றி!
ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் 9 முறை மோத வேண்டும். மொத்தமாக இந்த உலகக் கோப்பை தொடரில் 48 போட்டிகள் நடத்தப்படுகிறது. அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கும் முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடக்கிறது.
இந்தியா தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி அக்டோபர் 8 ஆம் தேதி சென்னையில் நடக்கிறது. மேலும், 14 ஆம் தேதி அகமதாபாத்தில் நடக்கும் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்பு உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியின் ஜெர்சி வெளியிடப்பட்டது. இதில், தோள்பட்டையில் மூவர்ண நிறம் இடம் பெற்றிருக்கும் வகையில் ஜெர்சி வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், தான் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை 2023க்கான பரிசுத் தொகையை ஐசிசி அறிவித்துள்ளது. அதன்படி இந்த உலகக் கோப்பை தொடருக்கு மொத்தமாக 10 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ. 83,10,50,000.00) அதாவது, ரூ.83 கோடி என்று அறிவிக்கப்பட்டது. இதில் சாம்பியனாகும் அணிக்கு 4 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் 33,24,20,000.00) அதாவது ரூ.33.24 கோடி என்று அறிவிக்கப்பட்டது.
மேலும், 2ஆவது இடம் பிடிக்கும் அணிக்கு 2 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.16,62,10,000.00) அதாவது, ரூ.16.62 கோடி அறிவிக்கப்பட்டது. அதே போன்று அரையிறுதிப் போட்டியில் தோல்வி அடையும் 2 அணிகளுக்கு 16,00,000 டாலர் (இந்திய மதிப்பில் ரூ. 131898908) அதாவது, ரூ.13.18 கோடி ஆகும். அதே போல குரூப் சுற்றில் தோல்வி அடைந்து வெளியேறும் 6 அணிகளுக்கு 6,00,000 டாலர் (இந்திய மதிப்பில் ரூ. 4,92,83,607) அதாவது ரூ.4.92 கோடி ஆகும்.
கடைசியாக ஒவ்வொரு லீக் போட்டியிலும் (மொத்தம் 45 லீக் போட்டிகள்) வெற்றி பெறும் அணிகளுக்கு 18,00,000 டாலர் (இந்திய மதிப்பில் ரூ.1,49,28,370.74) அதாவது 1.49 கோடி வழங்கப்படும் என்று ஐசிசி அறிவித்துள்ளது.