எம் எஸ் தோனி - சுரேஷ் ரெய்னாவின் பாச பிணைப்பை வார்த்தைகளால் விவரிக்கவே முடியாது!

By Rsiva kumarFirst Published Dec 30, 2022, 5:31 PM IST
Highlights

எம் எஸ் தோனி மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோரது பாச பிணைப்பை வெறும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

கடந்த 1981 ஆம் ஆண்டு ராஞ்சியில் பிறந்த எம் எஸ் தோனி, உள்ளூர் அணியான பீகார் அணியில் இடம் பெற்று கடந்த 1999 ஆம் ஆண்டு முதல் 2003 ஆம் ஆண்டு வரை விளையாடினார். இதில், தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தோனி கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 23 ஆம் தேதி வங்கதேச அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியின் மூலம் இந்திய அணியில் அறிமுகமானார். இதே போன்று கடந்த 2005 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் தேதி இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூலம் இந்திய அணியில் இடம் பிடித்தார். அடுத்த ஆண்டில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டியில் அறிமுகமானார்.

ஹர்திக் பாண்டியா தான் இந்திய அணியின் அடுத்த கேப்டன்: குமார் சங்கக்காரா!

ஆரம்பம் முதலே 11 கொண்ட குழுவில் ஒருவராக திகழ்ந்த எம் எஸ் தோனி, தனது பேட்டிங் திறமையால் இந்திய அணியை வழிநடத்தும் பொறுப்பை பெற்றார். மேலும், கடந்த 2007 ஆம் ஆண்டு ஐசிசி டி20 உலக கோப்பையை வென்றார். 2011 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பையை இந்திய அணிக்கு வென்று கொடுத்தார். 2013 ஆம் ஆண்டு நடந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வென்றார். தோனியின் கேப்டன்ஸியில் இந்திய அணி 2010 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் ஆசிய கோப்பையையும் வென்றது. ஜார்க்கண்ட் அணிக்காகவும் விளையாடியுள்ளார். ஐபிஎல் சீசனின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாகவும் இருந்துள்ளார்.

நான் தூங்கியதால் விபத்து ஏற்பட்டது: நொடிப் பொழுதில் உயிர் பிழைத்த ரிஷப் பண்ட் ஓபன் டாக்!

கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணிக்கு கேப்டனாகவும், 2008 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரையில் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணிக்கு கேப்டனாகவும் இருந்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூலை 9 ஆம் தேதி நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டி தான் தோனியின் கடைசி ஒரு நாள் போட்டி. இதே போன்று கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 27 ஆம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த டி20 போட்டி தான் தோனிக்கு கடைசி டி20 போட்டி. கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டி தான் தோனியின் கடைசி டெஸ்ட் போட்டி. கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 30 ஆம் தேதி டெஸ்ட் போட்டியிலிருந்து தான் ஓய்வு பெறுவதாக தோனி அறிவித்தார். அவர் அறிவித்து இன்றுடன் 8 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எலும்பியல் மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்களின் கண்காணிப்பில் ரிஷப் பண்ட்: டேராடூன் மருத்துவர் ஆஷிஸ்

தோனி டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு அந்த ஒரு நாள் முழுவதும் தோனி அதே ஜெர்ஸியில் தான் தூங்கினார் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி இருவரும் நீண்ட காலமாக நண்பர்களாக இருக்கின்றனர். சிலரது நட்புகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. தோனியின் கடைசி டெஸ்ட் போட்டியில் சுரேஷ் ரெய்னா, நண்பனான தோனிக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவரது 251 எண் கொண்ட ஜெர்ஸியில் தான் களமிறங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

விபத்து நடந்த இடம் போர்க்களம் போல் காட்சியளித்தது.. ரிஷப் பண்ட் உயிர் பிழைத்தது மறுபிழைப்பு..! போலீஸார் தகவல்

click me!