இந்தியா - பாகிஸ்தான் இடையே மெல்பர்னில் டெஸ்ட்..? பிசிசிஐ தகவல்

By karthikeyan VFirst Published Dec 30, 2022, 4:55 PM IST
Highlights

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான டெஸ்ட் போட்டியை எந்த நாட்டிலும் நடத்தும் திட்டமில்லை என்று பிசிசிஐ தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுவிட்டது.
 

இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே சுமூக உறவு இல்லாததால் இந்திய அணி பாகிஸ்தானுடன் கிரிக்கெட் ஆடுவதை நிறுத்திவிட்டது. ஐசிசி தொடர்களில் மட்டும் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

இரு அணிகளும் இருதரப்பு தொடரில் ஆடுவதில்லை. இந்தியா - பாகிஸ்தான் இடையே இருதரப்பு தொடர் நடந்து 12 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்திய அணி பாகிஸ்தானுக்கு சென்று 12 ஆண்டுகள் ஆகிவிட்டது. 

2022ம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் லெவன்.. ஹர்ஷா போக்ளேவின் அதிரடி தேர்வு

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான டெஸ்ட் தொடர் கடைசியாக 2007ம் ஆண்டு நடந்தது. அதன்பின்னர் இரு அணிகளும் டெஸ்ட் போட்டியில் ஆடவில்லை. இந்தியா - பாகிஸ்தான் டெஸ்ட் போட்டியை காண ரசிகர்கள் ஆர்வமாக இருந்தாலும், இதுதொடர்பாக பிசிசிஐ முடிவெடுக்க முடியாது. இந்த விஷயத்தில் இந்திய அரசின் முடிவின் படியே பிசிசிஐ செயல்பட முடியும். 

இந்திய அணி பாகிஸ்தானுக்கு சென்றும் ஆடுவதில்லை. 2023ம் ஆண்டு ஆசிய கோப்பை பாகிஸ்தானில் நடப்பதாக திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லாது என்பதால், பொதுவான இடத்திற்கு அந்த தொடரை மாற்ற பிசிசிஐ முயற்சிக்கும். இதுதொடர்பாக அண்மையில் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறிய கருத்துக்கு, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவர் ரமீஸ் ராஜா பதில் கூறியது பெரும் சர்ச்சையாக வெடித்தது.

விபத்து நடந்த இடம் போர்க்களம் போல் காட்சியளித்தது.. ரிஷப் பண்ட் உயிர் பிழைத்தது மறுபிழைப்பு..! போலீஸார் தகவல்

இந்நிலையில், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான டெஸ்ட் போட்டியை, விக்டோரியா மாகாண அரசும் மெல்பர்ன் கிரிக்கெட் கிளப்பும் இணைந்து நடத்த விருப்பம் தெரிவித்தன. ஆனால் இந்தியா - பாகிஸ்தான் டெஸ்ட் போட்டியை நடத்தும் திட்டம் இல்லவே இல்லை என்றும், எந்த நாட்டிலும் பாகிஸ்தானுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் ஆடுவதை இந்தியா விரும்பவில்லை என்றும், அப்படியான விருப்பம் இருப்பவர்கள் அவர்களே வைத்துக்கொள்ளட்டும் என்றும் பிசிசிஐ தரப்பில் தடாலடியாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

click me!