ஹர்திக் பாண்டியா தான் இந்திய அணியின் அடுத்த கேப்டன்: குமார் சங்கக்காரா!

By Rsiva kumarFirst Published Dec 30, 2022, 4:06 PM IST
Highlights

இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த கேப்டன் ஹர்திக் பாண்டியா தான் என்று இலங்கை அணியின் முன்னாள் விக்கெட் கீப்பரும், பேட்ஸ்மேனுமான குமார் சங்கக்காரா தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் அறிமுக அணியாக கலந்து கொண்ட குஜராஜ் டைட்டன்ஸ் அணி முதல் முறையாக கோப்பையை தட்டிச் சென்றது. குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாக செயல்பட்டார். சமீபத்தில் நடந்து முடிந்த அயர்லாந்து அணிக்கு எதிரான 2 டி20 போட்டிகள் கொண்ட தொடருக்கு கேப்டனாக செயல்பட்ட ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

நான் தூங்கியதால் விபத்து ஏற்பட்டது: நொடிப் பொழுதில் உயிர் பிழைத்த ரிஷப் பண்ட் ஓபன் டாக்!

இதே போன்று நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஹர்திக் பாண்டியாக தலைமையிலான இந்திய 
அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் பங்கேற்றது. இதில், டி20 தொடருக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாக செயல்பட்டார். ஒரு நாள் போட்டி தொடருக்கு தவான் கேப்டனாக செயல்பட்டார். முதல் டி20 போட்டி டாஸ் ஏதும் போடாமல் கைவிடப்பட்டது. 2ஆவது டி20 போட்டியில் இந்திய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 3 ஆவது மற்றும் கடைசி டி20 போட்டி டக் ஒர்த் லீவிஸ் முறைப்படி சமன் செய்யப்பட்டது. இதன் மூலம் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரை ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

எலும்பியல் மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்களின் கண்காணிப்பில் ரிஷப் பண்ட்: டேராடூன் மருத்துவர் ஆஷிஸ்

இதைத் தொடர்ந்து வரும் ஜனவரி மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும், 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் பங்கேற்கிறது. இலங்கை தொடருக்கான இந்திய அணி அண்மையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, 3 டி20 போட்டிகள் கொண்ட தொடருக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாகவும், சூர்யகுமார் யாதவ் துணை கேப்டனாகவும் செயல்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. அதே போன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடருக்கு ரோகித் சர்மா கேப்டனாகவும், ஹர்திக் பாண்டியா துணைக் கேப்டனாகவும் செயல்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

எலும்பியல் மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்களின் கண்காணிப்பில் ரிஷப் பண்ட்: டேராடூன் மருத்துவர் ஆஷிஸ்

இந்த நிலையில், ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்தது குறித்து இலங்கை அணியின் முன்னாள் விக்கெட் கீப்பரும், அதிரடி பேட்ஸ்மேனுமான குமார் சங்கக்காரா கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: கடந்த ஐபிஎல் சீசன் முதலாக ஹர்திக் பாண்டியாகவின் கேப்டன்ஸியை பார்த்து வருகிறேன். ஹர்திக் பாண்டியா கேப்டனாவதற்குரிய அனைத்து தகுதிகளும் அவரிடம் உள்ளன. ஆனால், ஒரு கேப்டனாக இருந்தால் என்னென்ன கடினமான சூழ்நிலைகளையும் சமாளிக்க வேண்டும் என்று அவருக்கு நினைவூட்டினார்.

Watch : கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்தின் கார் தீப்பிடித்து எரியும் காட்சி!

பாண்டியாவின் தலைமைப் பண்பு சிறப்பாக உள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதனை ஐபிஎல் சீசனில் பார்த்தோம். தற்போது தேசிய அளவில் தான் ஒரு சிறந்த கேப்டன் என்பதை பாண்டியா நிரூபிக்க வேண்டும். ஒரு தலைவராக இருப்பதற்கு நீங்கள் கேப்டனாக இருக்க வேண்டிய அவசியமில்லை. என்றாலும், தலைவராக இருப்பதற்கான அனைத்து தகுதிகளும் அவரிடம் உள்ளன என்று குமார் சங்கக்காரா தெரிவித்துள்ளார்.

விபத்து நடந்த இடம் போர்க்களம் போல் காட்சியளித்தது.. ரிஷப் பண்ட் உயிர் பிழைத்தது மறுபிழைப்பு..! போலீஸார் தகவல்

click me!