IPL 2023: லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளில் சரமாரி மாற்றங்கள்..! டாஸ் ரிப்போர்ட்

By karthikeyan V  |  First Published Apr 7, 2023, 7:35 PM IST

ஐபிஎல் 16வது சீசனின் இன்றைய போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸுக்கு எதிராக டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
 


ஐபிஎல் 16வது சீசனின் இன்றைய போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளுமே வெற்றி முனைப்பில் களமிறங்கியுள்ளன. சன்ரைசர்ஸ் அணியில் கேப்டன் ஐடன் மார்க்ரம் இணைந்துள்ளதால், இந்த போட்டியில் அவர் கேப்டன்சி செய்கிறார்.

லக்னோவில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் ஐடன் மார்க்ரம் பேட்டிங்கை தேர்வு செய்தார்.  சன்ரைசர்ஸ் அணியில் மார்க்ரம் இணைந்ததால் க்ளென் ஃபிலிப்ஸ் நீக்கப்பட்டுள்ளார். தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மா நீக்கப்பட்டு அன்மோல்ப்ரீத் சிங்கும், அப்துல் சமாத் அணியில் எடுக்கப்பட்டுள்ளார்.

Tap to resize

Latest Videos

IPL 2023: ரஜத் பட்டிதார், ரீஸ் டாப்ளிக்கு மாற்று வீரர்களை அறிவித்தது ஆர்சிபி

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியில் மார்க் உட்டுக்கு ஓய்வளிக்கப்பட்டு ரொமாரியோ ஷெஃபெர்டு அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆயுஷ் பதோனிக்கு பதிலாக அமித் மிஷ்ரா சேர்க்கப்பட்டுள்ளார்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி:

மயன்க் அகர்வால், அன்மோல்ப்ரீத் சிங் (விக்கெட் கீப்பர்), ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம் (கேப்டன்), ஹாரி ப்ரூக், வாஷிங்டன் சுந்தர், அப்துல் சமாத், புவனேஷ்வர் குமார், டி.நடராஜன், உம்ரான் மாலிக், அடில் ரஷீத். 

IPL 2023: ஃபார்மில் இல்லாத சூர்யகுமார் யாதவுக்கு டிவில்லியர்ஸ் உருப்படியான அட்வைஸ்..!

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி: 

கேஎல் ராகுல் (கேப்டன்), கைல் மேயர்ஸ், தீபக் ஹூடா, மார்கஸ் ஸ்டோய்னிஸ், நிகோலஸ் பூரன் (விக்கெட் கீப்பர்), ரொமாரியோ ஷெஃபெர்டு, க்ருணல் பாண்டியா, அமித் மிஷ்ரா, யஷ் தாகூர், ஜெய்தேவ் உனாத்கத், ரவி பிஷ்னோய்.
 

click me!