IPL 2023: அந்த ஒரு பந்தை வீச தெரியலைனா பவுலர்ஸ் வேஸ்ட்..! சிஎஸ்கே பவுலர்களுக்கு லெஜண்ட் பிராவோவின் அறிவுரை

By karthikeyan V  |  First Published Apr 7, 2023, 3:39 PM IST

எப்படிப்பட்ட பவுலராக இருந்தாலும், இக்கட்டான சூழலில் கைகொடுக்கக்கூடிய பந்து யார்க்கர் தான் என்று ட்வைன் பிராவோ தெரிவித்துள்ளார்.
 


ஐபிஎல் 16வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 4 முறை சாம்பியனான சிஎஸ்கே அணி, இந்த சீசனின் முதல் போட்டியில் தோற்ற சிஎஸ்கே அணி, 2வது போட்டியில் லக்னோ அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த சீசனில் சிஎஸ்கே அணியின் பெரிய பிரச்னையாக இருப்பது பவுலிங் தான். குறிப்பாக டெத் பவுலிங்.

சிஎஸ்கே அணியின் ஃபாஸ்ட் பவுலர் தீபக் சாஹர், புதிய பந்தில் ஸ்விங் செய்து வீசக்கூடியவர். அந்த அணியில் தரமான 2வது ஃபாஸ்ட் பவுலர் கிடையாது. மொயின் அலி, ஜடேஜா, சாண்ட்னெர், மஹீஷ் தீக்‌ஷனா என ஸ்பின் யூனிட் வலுவாக இருந்தாலும், ஃபாஸ்ட் பவுலிங், குறிப்பாக டெத் பவுலிங் பிரச்னையாக உள்ளது. 

Tap to resize

Latest Videos

IPL 2023:தென்னாப்பிரிக்க வீரர்கள் வருகையால் LSG-SRH அணிகளில் அதிரடி மாற்றங்கள்! இருஅணிகளின் உத்தேச ஆடும் லெவன்

லக்னோவிற்கு எதிராக சிஎஸ்கே ஜெயித்த போட்டியிலும் கூட, டெத் ஓவர்களில் அதிக ரன்கள் வழங்கப்பட்டன இந்நிலையில், டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட்டும் சிஎஸ்கே அணியின் முன்னாள் ஜாம்பவான் மற்றும் இந்நாள் பவுலிங் பயிற்சியாளருமான ட்வைன் பிராவோ பவுலிங் குறித்து பேசியுள்ளார்.

இதுகுறித்து பேசிய ட்வைன் பிராவோ, எப்போதும் சிறந்த பந்து யார்க்கர் தான். ஆனால் வீசுவதற்கு மிகக்கடினமான பந்து. மணிக்கணக்கில் யார்க்கர் வீசி தீவிர பயிற்சி செய்தால் மட்டுமே ஆட்டத்தில் சரியாக யார்க்கர் வீசமுடியும். வைடு யார்க்கர், அரௌண்ட் தி விக்கெட்டில் வந்து யார்க்கர் வீசுவது என பயிற்சி செய்ய வேண்டும். முதல் போட்டியுடன் ஒப்பிடுகையில் 2வது போட்டியில் எங்கள்(சிஎஸ்கே) பவுலிங் நன்றாகத்தான் இருந்தது. எங்கள் பவுலர்கள் 3 யார்க்கர்கள் வீசினார்கள்.

IPL 2023: ஃபார்மில் இல்லாத சூர்யகுமார் யாதவுக்கு டிவில்லியர்ஸ் உருப்படியான அட்வைஸ்..!

இப்போதைய சூழலில் நல்ல வேகம் இல்லாமல் யார்க்கர் வீசுவதில் பெரிய பயனில்லை. 150 கிமீ வேகத்தில் யார்க்கர் வீசமுடிந்தால் நல்லது. அழுத்தமான சூழலில் வீசுவதற்கு ஏற்ற பந்து யார்க்கர் தான்.. கடந்த போட்டியில் எங்கள் பவுலர்கள் 3 யார்க்கர்கள் வீசினார்கள். நெருக்கடியான சூழலில் பேட்ஸ்மேன்கள் அடிப்பதற்கு கடினமான பந்து யார்க்கர் என்று பிராவோ தெரிவித்தார்.
 

click me!