கணவர் இல்லாமல் சானியா மிர்சா இஃப்தார் கொண்டாடிய வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்ட நிலையில், தற்போது இருவருக்கும் இடையில் விவாகரத்து வதந்திகளை மீண்டும் கிளப்பியுள்ளது.
இந்தியாவின் தலைசிறந்த டென்னிஸ் வீராங்கனைகளில் ஒருவர் சானியா மிர்சா. இவருக்கும், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கிற்கும் கடந்த 2018 ஆம் ஆண்டு அக்டோபர் 30 ஆம் தேதி திருமணம் நடந்தது. இவர்களுக்கு இஷான் என்ற ஒரு மகன் இருக்கிறான். இந்த நிலையில், மெக்காவின் மதீனாவுக்கு புனிதப் பயணம் மேற்கொண்ட டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, அவர் தனது இஸ்டாகிராம் பக்கத்தில், "இஃப்தார் என் உடன்" என்ற தலைப்பில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
IPL 2023: அதிக உடல் எடையால் விமர்சனத்திற்கு உள்ளான ஷர்துல் தாக்கூர் இன்று ஆட்டநாயகன்!
அந்த வீடியோவில் கணவர் இல்லாமால், அவர் தனது மகனுக்கு இப்தாரில் நோன்பு திறப்பது எப்படி என்று கற்றுக் கொடுப்பதைக் காணலாம். அதில், சாண்ட்விச்கள், செவியன், ஜூஸ், தயிர், சாலட், தோக்லா என பல வகையான உணவுகள் இப்தார் விருந்தில் இடம் பெற்றிருந்தது. சட்னி மற்றும் எலுமிச்சை குடைமிளகாய் ஒரு கிண்ணமும் உள்ளது. சானியா தனது மகனுக்கு உணவைத் தொடங்குவதற்கு முன் எப்படி பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று வழிகாட்டுவதைக் காணலாம்.மனதைக் கவரும் இந்த வீடியோ 1.2 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளையும், 176 ஆயிரம் விருப்பங்களையும், ஆயிரத்திற்கும் அதிகமான கமெண்ட்டுகளையும் பெற்றுள்ளது.
IPL 2023: ஒரே நாளில் சிஎஸ்கே அணியின் 11 வருட சாதனையை முறியடித்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!
அதில், சிலர் சோயிப் மாலிக் குறித்து விசாரித்துள்ளனர். இதற்கிடையில் சானியா மிர்சா, தனது குடும்பத்தினருடன் மெக்காவில் உம்ரா செய்யும் வீடியோவை பகிர்ந்துள்ளார். ஏற்கனவே சமூக வலைதளங்களில் சானியா மிர்சா மற்றும் சோயிப் மாலிக் இருவரும் பிரிந்து விட்டதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவி வரும் நிலையில், இந்த இப்தார் விருந்தும் கூட வதந்திக்கு காரணமாக அமைந்துவிட்டது. எனினும், சானியா மிர்சா மற்றும் சோயிப் மாலிக் இருவரும் விவாகரத்து வதந்தி குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.