IPL 2023: கேகேஆரின் சுழலில் சுருண்டது ஆர்சிபி..! கேகேஆர் அபார வெற்றி

Published : Apr 06, 2023, 11:13 PM IST
IPL 2023: கேகேஆரின் சுழலில் சுருண்டது ஆர்சிபி..! கேகேஆர் அபார வெற்றி

சுருக்கம்

ஐபிஎல் 16வது சீசனில் கேகேஆருக்கு எதிராக 205 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய ஆர்சிபியை 123 ரன்களுக்கு சுருட்டி 81 ரன்கள் வித்தியாசத்தில் கேகேஆர் அணி அபார வெற்றி பெற்றது.   

ஐபிஎல் 16வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. கொல்கத்தா ஈடன் கார்டனில் நடந்த போட்டியில் கேகேஆரும் ஆர்சிபியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் டுப்ளெசிஸ் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். 

ஆர்சிபி அணி:

விராட் கோலி, ஃபாஃப் டுப்ளெசிஸ் (கேப்டன்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), க்ளென் மேக்ஸ்வெல், மைக்கேல் பிரேஸ்வெல், ஷபாஸ் அகமது, டேவிட் வில்லி, கரன் ஷர்மா, ஆகாஷ் தீப், முகமது சிராஜ்.

கேகேஆர் அணி:

மந்தீப் சிங், ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), நிதிஷ்  ராணா (கேப்டன்), ரிங்கு சிங், ஆண்ட்ரே ரசல், ஷர்துல் தாகூர், சுனில் நரைன், சுயாஷ் ஷர்மா, டிம் சௌதி, உமேஷ் யாதவ், வருண் சக்கரவர்த்தி.

முதலில் பேட்டிங் ஆடிய கேகேஆர் அணியின் தொடக்க வீரர் வெங்கடேஷ் ஐயர் (3) மற்றும் மந்தீப் சிங்(0) ஆகிய இருவரையும் அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தினார் டேவிட் வில்லி. கேப்டன் நிதிஷ் ராணா ஒரு ரன்னுக்கு நடையை கட்ட, ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தலும், மறுமுனையில் நிலைத்து ஆடி அரைசதம் அடித்த தொடக்க வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் 57 ரன்களுக்கு வெளியேறினார்.  அதன்பின்னர் ஆண்ட்ரே ரசல் முதல் பந்திலேயே டக் அவுட்டாக, 89 ரன்களுக்கே கேகேஆர் அணி 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. 

IPL 2023: ஃபார்மில் இல்லாத சூர்யகுமார் யாதவுக்கு டிவில்லியர்ஸ் உருப்படியான அட்வைஸ்..!

6வது விக்கெட்டுக்கு ரிங்கு சிங்குடன் ஜோடி சேர்ந்த ஷர்துல் தாகூர் அதிரடியாக பேட்டிங் ஆடி பவுண்டரியும் சிக்ஸருமாக ஆர்சிபி பவுலிங்கை அடித்து ஆடி 20 பந்தில் அரைசதம் அடித்தார். அதிரடியாக ஆடி 29 பந்தில் 9 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 68 ரன்களை குவிக்க, அவருடன் இணைந்து அபாரமாக ஆடிய ரிங்கு சிங் 33 பந்தில் 46 ரன்கள் அடித்தார். 6வது விக்கெட்டுக்கு ஷர்துல் தாகூரும் ரிங்கு சிங்கும் இணைந்து 103 ரன்களை குவிக்க,  20 ஓவரில் 204 ரன்களை குவித்தது கேகேஆர் அணி.

205 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய ஆர்சிபி அணியின் தொடக்க வீரர்கள் விராட் கோலி - ஃபாஃப் டுப்ளெசிஸ் இணைந்து முதல் 4 ஓவரில் அடித்து ஆடி 42 ரன்களை குவித்தனர். 5வது ஓவரை வீசிய சுனில் நரைன், விராட் கோலியை 21 ரன்களுக்கு வீழ்த்தி பிரேக் கொடுக்க, அடுத்த ஓவரிலேயே டுப்ளெசிஸை 23 ரன்களுக்கு வீழ்த்தினார் வருண் சக்கரவர்த்தி. 

IPL 2023: எப்பேர்ப்பட்ட பிளேயர் அவரு.. சரியா யூஸ் பண்ண தெரியல..! சாம்சன், சங்கக்கராவை கடுமையாக விளாசிய சேவாக்

அதன்பின்னர் க்ளென் மேக்ஸ்வெல்(5) மற்றும் ஹர்ஷல் படேல் (0) ஆகிய இருவரையும் வருண் சக்கரவர்த்தி வீழ்த்தினார். மைக்கேல் பிரேஸ்வெல்லை 15 ரன்களுக்கு  ஷர்துல் தாகூரும். ஷபாஸ் அகமதுவை(1) சுனில் நரைனும் வீழ்த்த, தினேஷ் கார்த்திக் (9), அனுஜ் ராவத்(1) மற்றும் கரன் ஷர்மா ஆகிய மூவரையும் அறிமுக ஸ்பின்னர் சுயாஷ் ஷர்மா வீழ்த்தினார். கடைசி விக்கெட்டை வருண் சக்கரவர்த்தி வீழ்த்த 123 ரன்களுக்கு ஆல் அவுட்டானது ஆர்சிபி அணி. இதையடுத்து 81 ரன்கள் வித்தியாசத்தில் கேகேஆர் அணி அபார வெற்றி பெற்றது. 
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Vaibhav Sooryavanshi: SRHஐ துவம்சம் செய்த RR! 'வைபவ்' ஆட்டத்தால் குவாலிபையர் 2-க்குள் கெத்தாக நுழைவு
Vaibhav Sooryavanshi: மரண காட்டு காட்டிய வைபவ்.. ஒரே மேட்ச்ல் இத்தனை சாதனைகளா..?