IPL 2023: ஐபிஎல் வரலாற்றில் 3ம் இடம்.. பின்வரிசையில் பிரம்மாண்ட சாதனை படைத்த ஷர்துல் தாகூர் - ரிங்கு சிங் ஜோடி

Published : Apr 06, 2023, 10:22 PM IST
IPL 2023: ஐபிஎல் வரலாற்றில் 3ம் இடம்.. பின்வரிசையில் பிரம்மாண்ட சாதனை படைத்த ஷர்துல் தாகூர் - ரிங்கு சிங் ஜோடி

சுருக்கம்

ஐபிஎல்லில் 6வது விக்கெட் அல்லது அதற்கு கீழ் 100 ரன்களை குவித்த 3வது ஜோடி என்ற சாதனையை ஷர்துல் தாகூர்- ரிங்கு சிங் ஜோடி படைத்துள்ளது.   

ஐபிஎல் 16வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. முதல் போட்டியில் தோற்ற கேகேஆரும், முதல் போட்டியில் வெற்றி பெற்ற ஆர்சிபி அணியும் இன்றைய போட்டியில் ஆடிவருகின்றன. கொல்கத்தா ஈடன் கார்டனில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் டுப்ளெசிஸ் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். 

ஆர்சிபி அணி:

விராட் கோலி, ஃபாஃப் டுப்ளெசிஸ் (கேப்டன்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), க்ளென் மேக்ஸ்வெல், மைக்கேல் பிரேஸ்வெல், ஷபாஸ் அகமது, டேவிட் வில்லி, கரன் ஷர்மா, ஆகாஷ் தீப், முகமது சிராஜ்.

கேகேஆர் அணி:

மந்தீப் சிங், ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), நிதிஷ்  ராணா (கேப்டன்), ரிங்கு சிங், ஆண்ட்ரே ரசல், ஷர்துல் தாகூர், சுனில் நரைன், சுயாஷ் ஷர்மா, டிம் சௌதி, உமேஷ் யாதவ், வருண் சக்கரவர்த்தி.

IPL 2023: ஃபார்மில் இல்லாத சூர்யகுமார் யாதவுக்கு டிவில்லியர்ஸ் உருப்படியான அட்வைஸ்..!

முதலில் பேட்டிங் ஆடிய கேகேஆர் அணியின் தொடக்க வீரர்களாக ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஆகிய இருவரும் களமிறங்கினர். வெங்கடேஷ் ஐயரை 3 ரன்களுக்கு வீழ்த்திய டேவிட் வில்லி, அடுத்த பந்திலேயே மந்தீப் சிங்கை வீழ்த்தினார். கேப்டன் நிதிஷ் ராணா ஒரு ரன்னுக்கு நடையை கட்ட, ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தலும், மறுமுனையில் நிலைத்து ஆடி அரைசதம் அடித்த தொடக்க வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் 57 ரன்களுக்கு வெளியேறினார். 

அதன்பின்னர் ஆண்ட்ரே ரசல் முதல் பந்திலேயே டக் அவுட்டாக, 89 ரன்களுக்கே கேகேஆர் அணி 5 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. 6வது விக்கெட்டுக்கு ரிங்கு சிங்குடன் ஜோடி சேர்ந்த ஷர்துல் தாகூர் அதிரடியாக பேட்டிங் ஆடி பவுண்டரியும் சிக்ஸருமாக ஆர்சிபி பவுலிங்கை அடித்து ஆடி 20 பந்தில் அரைசதம் அடித்தார். அதிரடியாக ஆடி 29 பந்தில் 9 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 68 ரன்களை குவிக்க, அவருடன் இணைந்து அபாரமாக ஆடிய ரிங்கு சிங் 33 பந்தில் 46 ரன்கள் அடித்தார். 

ஐபிஎல்லில் 7ம் வரிசையில் இறங்கி அதிக ரன்களை குவித்த வீரர்கள் பட்டியலில் 2ம் இடத்தை ட்வைன் பிராவோவுடன் பகிர்ந்தார் ஷர்துல் தாகூர். ஷர்துல் தாகூரின் சாதனை அரைசதத்தால் 20 ஓவரில் 204 ரன்களை குவித்தது கேகேஆர் அணி. 205 ரன்கள் என்ற கடின இலக்கை ஆர்சிபி அணி விரட்டிவருகிறது.

IPL 2023: எப்பேர்ப்பட்ட பிளேயர் அவரு.. சரியா யூஸ் பண்ண தெரியல..! சாம்சன், சங்கக்கராவை கடுமையாக விளாசிய சேவாக்

இந்த போட்டியில் 6வது விக்கெட்டுக்கு ஷர்துல் தாகூரும் ரிங்கு சிங்கும் இணைந்து 103 ரன்களை குவித்தனர். இதன்மூலம் ஐபிஎல்லில் 6வது விக்கெட் அல்லது அதற்கு கீழ் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த 3வது ஜோடி என்ற சாதனையை படைத்துள்ளனர். இந்த பட்டியலில் முதல் 3 இடங்களை பிடித்துள்ள ஜோடிகளை பார்ப்போம்.

1. அம்பாதி ராயுடு & கைரன் பொல்லார்டு(MI) - 122 ரன்கள் vs ஆர்சிபி 

2. டேவிட் ஹசி & ரிதிமான் சஹா (PBKS) - 104 ரன்கள் vs கேகேஆர் 

3. ஷர்துல் தாகூர் & ரிங்கு சிங் (கேகேஆர்) - 103 ரன்கள் vs ஆர்சிபி 
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs SA 2nd T20: சுப்மன் கில், சூர்யகுமார் படுமோசம்..! இந்தியாவை ஊதித்தள்ளிய தென்னாப்பிரிக்கா!
டி20 உலகக்கோப்பை டிக்கெட் வெறும் 100 ரூபாய் தான்! எப்படி புக் செய்வது? முழு விவரம் இதோ!