IPL 2023: கேகேஆர் - ஆர்சிபி பலப்பரீட்சை.. டாஸ் ரிப்போர்ட்..! இரு அணிகளிலும் தலா ஒரு அதிரடி மாற்றம்

By karthikeyan V  |  First Published Apr 6, 2023, 7:21 PM IST

ஐபிஎல் 16வது சீசனில் கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
 


ஐபிஎல் 16வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த சீசனில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் சிறப்பாக ஆடி தொடர்ச்சியாக 2 வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களில் உள்ளன.

இன்று கொல்கத்தா ஈடன் கார்டனில் நடக்கும் போட்டியில் கேகேஆர் - ஆர்சிபி அணிகள் மோதுகின்றன. முதல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸிடம் தோற்ற கேகேஆர் அணி, 2வது போட்டியில் சொந்த மண்ணில் வெற்றியை பெறும் முனைப்பில் கேகேஆர் அணி களமிறங்கியுள்ளது. முதல் போட்டியில் 5 முறை சாம்பியன் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி அபார வெற்றியுடன் சீசனை தொடங்கிய ஆர்சிபி அணி, வெற்றி பயணத்தை தொடரும் முனைப்பில் களமிறங்கியுள்ளது.

Tap to resize

Latest Videos

IPL 2023: எப்பேர்ப்பட்ட பிளேயர் அவரு.. சரியா யூஸ் பண்ண தெரியல..! சாம்சன், சங்கக்கராவை கடுமையாக விளாசிய சேவாக்

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் ஃபாஃப் டுப்ளெசிஸ் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். இரு அணிகளிலுமே தலா ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடந்த போட்டியில் ரீஸ் டாப்ளி காயம் அடைந்ததால் அவருக்கு பதிலாக இங்கிலாந்து ஃபாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டர் டேவிட் வில்லி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். கேகேஆர் அணியில் அனுகுல் ராய்க்கு பதிலாக சுயாஷ் ஷர்மா சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆர்சிபி அணி:

விராட் கோலி, ஃபாஃப் டுப்ளெசிஸ் (கேப்டன்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), க்ளென் மேக்ஸ்வெல், மைக்கேல் பிரேஸ்வெல், ஷபாஸ் அகமது, டேவிட் வில்லி, கரன் ஷர்மா, ஆகாஷ் தீப், முகமது சிராஜ்.

IPL 2023: ஐபிஎல் 16வது சீசனில் கண்டிப்பாக அந்த அணி தான் கோப்பையை வெல்லும்; RCB இல்ல! டிவில்லியர்ஸ் திட்டவட்டம்

கேகேஆர் அணி:

மந்தீப் சிங், ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), நிதிஷ்  ராணா (கேப்டன்), ரிங்கு சிங், ஆண்ட்ரே ரசல், ஷர்துல் தாகூர், சுனில் நரைன், சுயாஷ் ஷர்மா, டிம் சௌதி, உமேஷ் யாதவ், வருண் சக்கரவர்த்தி.
 

click me!