
இந்திய அணி ஒருநாள் உலக கோப்பைக்காக தீவிரமாக தயாராகிவருகிறது. 2011ம் ஆண்டுக்கு பின் மீண்டும் இந்திய மண்ணில் உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்று தீவிரமாக தயாராகிவருகிறது இந்திய அணி. இந்திய அணியின் ஆடும் லெவன் கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுவிட்டது.
ஓபனிங்கை பொறுத்தமட்டில் ரோஹித்துடன் ஷுப்மன் கில் இறங்குவது உறுதியாகிவிட்டது. ஒருநாள் கிரிக்கெட்டில் கடந்த 10 ஆண்டுகளாக இந்திய அணியின் தொடக்க வீரராக ரோஹித்துடன் சேர்ந்து பல அருமையான தொடக்கங்களை அமைத்து கொடுத்து இந்திய அணியின் வெற்றிகளில் முக்கிய பங்காற்றியவர் ஷிகர் தவான்.
உலக கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி ஆகிய மிகப்பெரிய ஐசிசி தொடர்களில் மிகச்சிறப்பாக ஆடக்கூடிய வெகுசில வீரர்களில் ஷிகர் தவானும் ஒருவர். ரோஹித்துடன் இணைந்து ஓபனிங்கில் பல சாதனைகளை படைத்துள்ளார். 167 ஒருநாள் போட்டிகளில் ஆடி 6793 ரன்களை குவித்துள்ளார் ஷிகர் தவான்.
2022ம் ஆண்டு 22 ஒருநாள் போட்டிகளில் ஆடி 70 என்ற நல்ல ஸ்டிரைக் ரேட்டில் ஆடி 688 ரன்களை அடித்துள்ளார். ஷிகர் தவான் நன்றாக ஆடினாலும், ஒருநாள் கிரிக்கெட்டின் அணுகுமுறை மாறிவிட்ட நிலையில், அதிரடியான ஓபனிங்கிற்கு முக்கியத்துவமும் முன்னுரிமையும் கொடுக்கப்படுகிறது. அந்தவகையில் வங்கதேசத்துக்கு எதிராக இஷான் கிஷன் இரட்டை சதமடிக்க, அவரைத்தொடர்ந்து நியூசிலாந்துக்கு எதிராக ஷுப்மன் கில் இரட்டை சதமடித்தார். இவர்கள் இருவரது இரட்டை சதங்களால் ஷிகர் தவான் ஒருநாள் அணியிலிருந்து மொத்தமாக ஒதுக்கப்பட்டார்.
37 வயதான ஷிகர் தவான் ஐபிஎல்லில் பல சீசன்களாக தொடர்ந்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்திவருபவர். ஒவ்வொரு சீசனிலும் குறைந்தபட்சம் 400 ரன்களை கண்டிப்பாக அடித்துவிடுவார். இந்த சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்படுகிறார். ஷிகர் தவான் இந்த ஐபிஎல்லில் பேட்ஸ்மேனாக மட்டுமல்லாது கேப்டனாகவும் ஜொலித்துவருகிறார். ஷிகர் தவானின் கேப்டன்சியில் பஞ்சாப் கிங்ஸ் அணி, இந்த சீசனில் ஆடிய முதல் 2 போட்டிகளிலும் கேகேஆர் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளை வீழ்த்தி வெற்றி கண்டது.
கேகேஆருக்கு எதிராக 40 ரன்கள் அடித்திருந்த தவான், ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான நேற்றைய போட்டியில் அபாரமாக பேட்டிங் ஆடி 56 பந்தில் 86 ரன்களை குவித்து கடைசி வரை களத்தில் நின்று இன்னிங்ஸை முடித்து கொடுத்தார். 56 பந்தில் 9 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களை விளாசி, 37 வயதிலும் செம கெத்தாக ஆடினார் தவான்.
ஷிகர் தவான் அடித்து ஆடி தனது திறமையை மீண்டும் நிரூபித்துவரும் நிலையில், ஷிகர் தவானை இந்திய அணி புறக்கணித்த நிலையில், அதுகுறித்த அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார் ஹர்பஜன் சிங்.
IPL 2023: ஃபார்மில் இல்லாத சூர்யகுமார் யாதவுக்கு டிவில்லியர்ஸ் உருப்படியான அட்வைஸ்..!
இதுகுறித்து பேசிய ஹர்பஜன் சிங், ஷிகர் தவான் இந்திய அணியின் கேப்டனாக இருந்து வழிநடத்தியுள்ளார். கேப்டனை ரோலை கொடுத்துவிட்டு ஒதுக்குவது என்பது சரியல்ல. அவர் ட்ரீட் செய்யப்பட்ட விதத்தை பார்த்து எனக்கே மனது கஷ்டமாகிவிட்டது. அனைவரும் ஒரேமாதிரி ட்ரீட் செய்யப்பட வேண்டும். இந்திய அணிக்காக மிகச்சிறந்த பங்காற்றியுள்ளார்.
ரோஹித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல் ஆகிய பெரிய வீரர்களுக்கு அதிகமான வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. ஆனால் ஷிகர் தவான் மட்டும் ஒதுக்கப்படுகிறார். அவர் அணிக்காக எப்போதுமே சிறப்பான பங்களிப்பை செய்கிறார். பிறகு அவருக்கு மட்டும் ஏன் இந்திய அணியில் இடம் வழங்கப்படுவதில்லை என்றார் ஹர்பஜன் சிங்.