ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2ஆவது ஒரு நாள் போட்டியில் ஹர்திக் பாண்டியா கொடுத்த கேட்சை ஸ்டீவ் ஸ்மித் பறவை போன்று பறந்து பிடித்து அசத்தியுள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான முதல் ஒரு நாள் போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்று முன்னிலை பெற்றுள்ளது. இதையடுத்து, இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது ஒரு நாள் போட்டி தற்போது விசாகப்பட்டினம் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் என்ற திட்டதோடு டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தார். அதோடு அணியிலும் 2 மாற்றங்களும் செய்திருந்தார். நாதன் எல்லீஸ் மற்றும் அலெகெஸ் கேரி இருவரை அணிக்கு கொண்டு வந்துள்ளார்.
இந்தியா:
ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் படேல், குல்தீப் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ்.
ஆஸ்திரேலியா
டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், ஸ்டீவ் ச்மித், மார்னஷ் லபுஷேன், அலெக்ஸ் கேரி, கேமரூன் க்ரீன், மார்கஸ் ஸ்டாய்னிஸ், சீன் அபாட், நாதன் எல்லிஸ், மிட்செல் ஸ்டார், ஆடம் ஜம்பா.
முதலில் களமிறங்கிய சுப்மன் கில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து முன்னாள் கேப்டன் விராட் கோலி மற்றும் தற்போதைய கேப்டன் இருவரும் ஜோடி சேர்ந்தனர். எனினும், ரோகித் சர்மா, 13 ரன்னில் ஸ்டார்க் பந்தில் ஸ்லிப்பில் நின்றிருந்த ஸ்டீவ் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இவருக்கு அடுத்து சூர்யகுமார் யாதவ் களமிறங்கினார். ஆனால், இவர் கோல்டன் டக் முறையில் ஆட்டமிழந்தார். இதன் மூலமாக 2ஆவது முறையாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடுத்தடுத்த போட்டிகளில் கோல்டன் டக் முறையில் ஆட்டமிழந்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
கிறிஸ் கெயிலைத் தொடர்ந்து வரலாற்று சாதனை படைத்த ஷோஃபி டிவைன்!
அடுத்து வந்த கேஎல் ராகுலும் 9 ரன்களில் எல்பிடபிள்யூ முறையில் வெளியேறினார். அடுத்ததாக ஹர்திக் பாண்டியா களமிறங்கினார். இவர் சீன் அபாட் ஓவரில் 9.2ஆவது பந்தில் ஸ்லிப் பக்கமாக பந்தை தடிட்டிவிட்டார். ஆனால் ஸ்லிப்பில் நின்றிருந்த ஸ்டீவ் ஸ்மித் பறவை போன்று பறந்து கேட்ச் பிடித்து ஹர்திக் பாண்டியா (1 ரன்) அவுட்டாக்கியுள்ளார். இது ஸ்டீவ் ஸ்மித்தின் 300ஆவது சர்வதேச கிரிக்கெட் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டியில் தற்போது வரையில் ஒருநாள் கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் முழு நேர கேப்டன் ரோகித் சர்மா ஆகியோரை கேட்ச் பிடித்து ஆட்டமிழக்கச் செய்துள்ளார்.
காலை முதல் மிதமான மழை; முழுசா தார்பாயால் மூடப்பட்ட விசாகப்பட்டினம் மைதானம்: டாஸ் தாமதம் ஏற்படுமா?
Normal day in the office for Steve Smith. pic.twitter.com/kBXJmT0Ufw
— Johns. (@CricCrazyJohns)
Taking blinders with one-hand: Steve Smith. pic.twitter.com/qguko4EmHs
— Johns. (@CricCrazyJohns)