NZ vs SL: 2வது டெஸ்ட்டிலும் வெற்றியை உறுதி செய்துவிட்ட நியூசிலாந்து..! இலங்கை ஒயிட்வாஷ் உறுதி

Published : Mar 19, 2023, 03:34 PM IST
NZ vs SL: 2வது டெஸ்ட்டிலும் வெற்றியை உறுதி செய்துவிட்ட நியூசிலாந்து..! இலங்கை ஒயிட்வாஷ் உறுதி

சுருக்கம்

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி, 2வது டெஸ்ட்டிலும் கிட்டத்தட்ட வெற்றியை உறுதி செய்துவிட்டதால், இலங்கை ஒயிட்வாஷ் ஆவது உறுதி.  

இலங்கை அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இலங்கை அணி நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்திருந்தால், இந்தியா - ஆஸ்திரேலியா கடைசி டெஸ்ட் டிராவில் முடிந்ததால் இலங்கை அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முன்னேற வாய்ப்பிருந்ததால், இலங்கை மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

ஆனால் முதல் டெஸ்ட்டில் இலங்கை தோற்றதால், இந்தியா - ஆஸ்திரேலியா கடைசிடெஸ்ட் டிராவில் முடிந்தும் கூட, இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முன்னேறியது. வரும் ஜூன் 7ம் தேதி லண்டன் ஓவலில் நடக்கும் ஃபைனலில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

ஷர்துல் தாகூருக்கு பதிலாக அக்ஸர் படேலை சேர்த்தது ஏன்? இது உலக கோப்பைக்கான திட்டம்.. கேப்டன் ரோஹித் ஓபன் டாக்

இலங்கை நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்யுமா என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நியூசிலாந்து இலங்கையை ஒயிட்வாஷ் செய்வதை உறுதிசெய்துவிட்டது. முதல் டெஸ்ட்டில் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்ற நிலையில், 2வது டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நடந்துவருகிறது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணியில் கேன் வில்லியம்சன் மற்றும் ஹென்ரி நிகோல்ஸ் ஆகிய இருவருமே அபாரமாக ஆடி இரட்டை சதமடித்தனர். வில்லியம்சன் 215 ரன்களையும், ஹென்ரி நிகோல்ஸ் 200 ரன்களையும் குவிக்க, முதல் இன்னிங்ஸில் 580 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது நியூசிலாந்து அணி.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இலங்கை அணியில் தொடக்க வீரர் திமுத் கருணரத்னே மட்டும் ஒருமுனையில் நிலைத்து நின்று பேட்டிங் ஆடிய நிலையில், மறுமுனையில் மற்ற வீரர்கள் அனைவருமே சொற்ப ரன்களுக்கு ஆல் அவுட்டாகி வெளியேறினர். கருணரத்னே அபாரமாக ஆடி 89 ரன்களை குவித்து சதத்தை தவறவிட்டு ஆட்டமிழந்தார். தினேஷ் சண்டிமால் 32 ரன்கள் அடித்தார். மற்ற அனைவருமே அதுகூட அடிக்காமல் ஆட்டமிழக்க, முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 164 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

ஃபாலோ ஆன் பெற்று 2வது இன்னிங்ஸை ஆடிவரும் இலங்கை அணி, 3ம் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 113 ரன்கள் அடித்துள்ளது. தொடக்க வீரர்கள் ஒஷாடா ஃபெர்னாண்டோ(5) மற்றும் கருணரத்னே(51) ஆகிய இருவரும் ஆட்டமிழந்துவிட்டனர். குசால் மெண்டிஸ் 50 ரன்களுடனும், ஆஞ்சலோ மேத்யூஸ் ஒரு ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

ஐபிஎல்லில் இருந்து விலகிய ஆர்சிபி வீரர்.! ஏலத்தில் நம்பி எடுத்து ஏமாந்த ஆர்சிபி.. மாற்று வீரர் அறிவிப்பு

இலங்கை அணி 303 ரன்கள் பின் தங்கியிருக்கும் அதேவேளையில், நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு 8 விக்கெட் மட்டுமே தேவை என்பதால் நியூசிலாந்து அணியின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. எனவே இலங்கை ஒயிட்வாஷ் ஆவது உறுதி.
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

IND vs NZ 2வது ஓடிஐயில் ரோகித், விராட் கோலி சொதப்புவார்கள்.. ஆருடம் சொன்ன அதிரடி வீரர்!
Virat Kohli: ஜஸ்ட் 1 ரன்னில் சச்சினின் சாதனையுடன் போட்டிப்போடும் கோலி