ஷர்துல் தாகூருக்கு பதிலாக அக்ஸர் படேலை சேர்த்தது ஏன்? இது உலக கோப்பைக்கான திட்டம்.. கேப்டன் ரோஹித் ஓபன் டாக்

By karthikeyan VFirst Published Mar 19, 2023, 2:44 PM IST
Highlights

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் ஷர்துல் தாகூருக்கு பதிலாக அக்ஸர் படேலை சேர்த்தது ஏன் என்று இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா விளக்கமளித்துள்ளார்.
 

ஒருநாள் உலக கோப்பை தொடர் இந்த ஆண்டின் இறுதியில் இந்தியாவில் நடக்கிறது. அதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன. ஒருநாள் உலக கோப்பையையொட்டி, கடந்த ஆண்டின் இறுதியிலிருந்து ஒருநாள் போட்டிகள் அதிகமாக ஆடப்படுகின்றன.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடந்துவரும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் ஆஸ்திரேலிய அணிக்கு இந்திய கண்டிஷனில் ஆடி ஒருநாள் தொடருக்கு தயாராவதற்கு சரியான வாய்ப்பு. அதேவேளையில், இந்திய அணிக்கும் வலுவான ஆடும் லெவன் காம்பினேஷனை உறுதி செய்ய முக்கியமான தொடர்.

ஐபிஎல்லில் இருந்து விலகிய ஆர்சிபி வீரர்.! ஏலத்தில் நம்பி எடுத்து ஏமாந்த ஆர்சிபி.. மாற்று வீரர் அறிவிப்பு

அந்தவகையில், இந்தியாவில் நடக்கும் ஒருநாள் உலக கோப்பையில் இந்திய அணி 3 ஸ்பின்னர்களுடன் ஆடுவதை உறுதி செய்துள்ளார் கேப்டன் ரோஹித் சர்மா.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று 1-0 என முன்னிலை வகிக்கிறது. முதல் போட்டியில் ஆடிராத கேப்டன் ரோஹித் சர்மா இன்று விசாகப்பட்டினத்தில் நடந்துவரும் 2வது ஒருநாள் போட்டியில் ஆடிவருகிறார்.

இந்த போட்டியில் ரோஹித் சர்மா ஆடுவதால் இஷான் கிஷன் அணியிலிருந்து நீக்கப்பட்டார். மேலும் இந்திய அணியில் மற்றுமொரு மாற்றமும் செய்யப்பட்டது. முதல் போட்டியில் ஆடிய ஷர்துல் தாகூருக்கு பதிலாக ஸ்பின் ஆல்ரவுண்டரான அக்ஸர் படேல் அணியில் சேர்க்கப்பட்டார். 

கோலி மாதிரி எத்தனை பேர் வந்தாலும் சச்சின் டெண்டுல்கரை நெருங்கக்கூட முடியாது..! சக்லைன் முஷ்டாக் கருத்து

இதுகுறித்து விளக்கமளித்த கேப்டன் ரோஹித் சர்மா, ஷர்துல் தாகூருக்கு பதிலாக அக்ஸர் படேல் ஆடுகிறார். முதலில் பந்துவீசினால் 3 ஸ்பின்னர்கள் தேவை என்பதால் அக்ஸரை எடுத்தோம். 2வது இன்னிங்ஸிலும் பந்து நன்றாக திரும்பும். எனவே 3 ஸ்பின்னர்கள் கண்டிப்பாக தேவை. உலக கோப்பையிலும் 3 ஸ்பின்னர்களுடனேயே ஆடுவோம். எனவே இப்போதே 3 ஸ்பின்னர்களை ஆடவைத்து முயற்சி செய்வது அவசியம் என்று ரோஹித் சர்மா தெரிவித்தார்.

click me!